முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

1ப

முதல் திருவாய்மொழி - பா. 4

23

1பாதுகாத்தலே பிரயோஜனமாக இருக்கிறவன், அருள் அற்றாரைப் போலே ஆவதே! ஆதியாகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட சோதி நீள் முடியாய் - 3உனக்கு ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருக்கச்செய்தேயும் பாதுகாப்பவன் அல்லையோ நீ! ஆன பின்பு உனக்கு இது போருமோ?’ 3திருமுடி தொடக்கமான திவ்விய ஆபரணங்களைத் தரித்துக்கொண்டு நித்தியசூரிகள் நடுவே இருக்கக்கடவ நீ, உலகத்திற்கு எல்லாம் காரணனாய்ப் பரப்பையுடைத்தான பூமியைப் படைத்து, பின் பிரளய ஆபத்து வர வயிற்றிலே எடுத்துவைத்து, பின் வெளி நாடு காணப்புறப்பட விட்டு, பின் மஹாபலி கவர்ந்துகொள்ள எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, பின் நைமித்திகப் பிரளயத்திலே மஹாவராஹமாய் எடுத்துக்கொண்டு ஏறி, இப்படிகளாலே எல்லா இரட்சணங்களையும் செய்யுமவன் அல்லையோ? தொண்டனேன் மதுசூதனனே - இவன் இரட்சகன் என்னுமிடத்துக்கு முன்னே ஒன்று தேடிச் சொல்ல வேணுமோ? மதுவைப் போக்கினாற்போலே நான் இந்திரியங்கட்குக் கட்டுப்பட்டிருத்தலை இன்று இருந்து போக்கினவன் அன்றோ? 4தன் படிகளைக் காட்டி எனக்குப் புறம்பு உண்டான வாசனையைப் போக்கி. இன்று கைக்கு எட்டாதிருக்கிற இதுவே அன்றோ குறை?

(3)

                    666

        சூது நான்அறி யாவ கைச்சு ழற்றிஓர்
             ஐவரைக் காட்டி உன்னடிப்
        போது நான்அணு காவகை
             செய்து போதி கண்டாய்
        யாதும் யாவரும் இன்று நின்ன
             கம்பால் ஒடுக்கிஓர் ஆலி னீளிலை
        மீது சேர்குழவி! வினையேன்
             வினைதீர் மருந்தே!

_______________________________________________

1. பின் இரண்டு அடிகளைக் கடாட்சித்து ‘அந்தோ’ என்பதற்கு வேறும் ஒரு
  பாவம் அருளிச்செய்கிறார், ‘பாதுகாத்தலே’ என்று தொடங்கி.

2. பின் இரண்டு அடிகளாலும் பலித்த பொருளை அருளிச்செய்கிறார்,
  ‘உனக்கு’ என்று தொடங்கி.

3. பின் இரண்டு அடிகட்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘திருமுடி’ என்று
  தொடங்கி.

4. ‘இந்திரியங்கட்குக் கட்டுப்பட்டிருத்தலைப் போக்கினானாகில்
  ‘மோதுவித்கிட்டு’ என்பான் என்?’ என்ன,
அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘தன் படிகளை’ என்று தொடங்கி.