முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

713

232

திருவாய்மொழி - ஏழாம் பத்து

             713

        கண்டு தெளிந்தும்கற் றார்கண்ணற்கு
             ஆளன்றி ஆவரோ?
        வண்டுண் மலர்த்தொங்கல் மார்க்கண்
             டேயனுக்கு வாழுநாள்
        இண்டைச் சடைமுடி ஈசன்
             உடன்கொண்டு உசாச்செல்லக்
        கொண்டங்குத் தன்னொடுங் கொண்டுஉடன்
             சென்றது உணர்ந்துமே.

   
பொ-ரை : ‘வண்டுகள் தேனை உண்ணுகின்ற மலர்களால் கட்டப்பட்ட மாலையைத் தரித்த மார்க்கண்டேயனுக்கு வாழ்நாள் அளித்தல் சம்பந்தமாக, பூமாலையைத் தரித்த சடைமுடியையுடைய சிவபெருமான், அவனைத் தன்னோடு அழைத்துக்கொண்டு, அறப் பெரியனான சர்வேஸ்வரன் பக்கல் உசாவ வேண்டும் என்று செல்ல, அந்த நிலையிலேயே அவனைக் காக்க வேண்டும் என்று திருவுள்ளத்தே கொண்டு தன்னோடே ஒத்த தன்மையையும் கொடுத்துப் பின் ஒரு நாளும் பிரியாதே சென்றபடியை உணர்ந்தமு கண்டும் தெளிந்தும் கற்றவர்கள் கண்ணபிரானுக்கு ஆள் ஆவரே அன்றி, மற்று ஒருவர்க்கு ஆவரோ? ஆகார்,’ என்றபடி.

    வி-கு : ஈசன் மார்க்கண்டேயனுக்கு வாழுநாளை உசாச்செல்ல. அங்குக் கொண்டு தன்னொடுங் கொண்டு உடன் சென்றதை உணர்ந்தும் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?’ எனக. இண்டை - மாலை.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1‘திருமகள் கேள்வனான தன்னைத் தாழவிட்டு இரந்து பாதுகாத்து ஒரு பெரிய ஏற்றமோ, வேறு தெய்வத்தைத் துதித்து வணங்கிய மார்க்கண்டேயனை அங்கீகரித்த இம்மஹாகுணத்துக்கு?’ என்கிறார்.

    கண்டும் தெளிந்தும் கற்றார் - கற்றுத் தெளிந்து கண்டார்; ஒருவன் பக்கலிலே ஓர் அர்த்தத்தைக் கேட்டு, அதிலே தெளிய வாசனை பண்ணி. பின்பு நேரே அறிதல் பரியந்தமாக்கி வைப்பார். 3கேட்டல் தெளிதல்கள்தாம், நேரே பார்ப்பதற்குச் சமானமான ஆகாரத்தளவும் சென்று நிற்கும் அன்றோ? கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ - 3தியானிக்கின்றவர்கள். தியானிக்கப்படுகின்ற

________________________________________________

1. பின் மூன்று அடிகளைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘கேட்டல் தெளிதல்கள்தாம், நேரே பார்த்தல் அளவாய் இருக்குமோ?’
  என்ன, ‘கேட்டல்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

3. ‘கண்டார்’ என்றதனைக் கடாட்சித்துப் பொருள் அருளிச்செய்கிறார்,
  ‘தியானிக்கின்றவர்கள்’ என்று தொடங்கி. தியானிக்கப்படுகின்ற பொருள் -
  குணங்களால் மேம்பட்ட பொருள்.