முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 8

235

மார்க்கண்டேயனைக் காத்த நீர்மைக்கு. 1தாமத புருஷர்களுடைய சினேகம் சர்வேஸ்வரன் விடுகைக்குக் காரணம்; சத்துவநிஷ்டருடைய சினேகம் அவன் அங்கீகரி்ப்பதற்குக் காரணம்; இங்ஙனே இருக்கச் செய்தே அன்றோ சிவன் முன்னிலையாக வந்த மார்க்கண்டேயனுக்கும் காரியம் செய்தது!

(7)

                        714

        செல்ல உணர்ந்தவர் செல்வன்தன் சீர்அன்றிக் கற்பரோ?
        எல்லை இலாத பெருந்தவத் தால்பல செய்மிறை
        அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
        மல்லல் அரியுரு வாய்ச்செய்த மாயம் அறிந்துமே.

    பொ - ரை : ‘எல்லை இல்லாத பெரிய தவத்தினாலே, தேவர்களுக்குப் பல வகையாக மிக்க துன்பங்களைச் செய்யும் இரணியனுடைய சரீரத்தைப் பெரிய நரசிங்கமாகிக் கிழித்த ஆச்சரியத்தை அறிந்தும், (ஐஸ்வரிய கைவல்யங்களிலே இழியாமல் பகவத் விஷயத்திலே இழிந்து, அது தன்னிலும் அவதரித்த மேல்எல்லை அளவும்) செல்லும்படி அனுபவித்தவர்கள், ‘திருமகள் கேள்வனுடைய பொருள் சேர் புகழை அன்றி மற்றையோருடைய பொருள் இல் புகழ்களைக் கற்பரோ? கல்லார்,’ என்றபடி.

    வி - கு :
மிறை - துன்பம்; மிறை அல்லல் - மிக்க துன்பம். அமரரை - வேற்றுமை மயக்கம். அரி - சிங்கம்.

    ஈடு : எட்டாம் பாட்டு. 2வேறு தேவதையை வணங்கித் துதித்தவனை அங்கீகரித்த மஹாகுணத்தைக்காட்டிலும் மனிதவடிவம் சிங்கவடிவம் என்னும் இரண்டனையும் ஏறிட்டுக்கொண்டு தன்னை அடைந்தவனைப் பாதுகாத்த மஹாகுணத்தை அருளிச்செய்கிறார்.

    செல்ல உணர்ந்தவர் - போலியான ஐஸ்வரியம் கைவல்யம் என்னும் இவற்றின் அளவிலே முடிவு பெற்று நில்லாமல், எல்லை நிலமான பகவத் புருஷார்த்தத்தளவும் செல்ல உணர்ந்தவர். என்றது, ‘அவனுடன் நித்தியமான இன்பத்தை வேண்டி இருக்கு

_____________________________________________________________

1. இது நீர்மையானபடியை விவரிக்கிறார், ‘தாமத புருஷர்களுடைய’ என்று
  தொடங்கி.

2. ‘மல்லல் அரி உருவாய்ச் செய்த மாயம் அறிந்தும்’ என்றதனைக் கடாட்சித்து
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.