முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

1

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 9

237

    1‘ஒருவன் புருஷகாரமாகக் கொடுவர் அவனைக் காப்பாற்றியது ஒரு குணமோ, தமப்பன் பகையாக, முகம் ஒருவடிவம் திருமேனி ஒரு வடிவுமாகக் கொண்டு பாதுகாத்த குணத்துக்கு?’ என்கிறார். 2‘பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றனாய் வளர்த்து’ என்கிறபடியே வந்து பாதுகாத்த குணம் அன்றோ?

(8)

                         715

        மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
        தாயம் செறும்ஒரு நூற்றுவர் மங்கஓர் ஐவர்க்காய்த்
        தேசம் அறியஓர் சாரதி யாய்ச்சென்று சேனையை
        நாசம் செய்திட்டு நடந்தநல் வார்த்தை அறிந்துமோ.

   
பொ - ரை : ‘தாய பாகத்தைச் செறுத்துக் கைக்கொண்ட துரியோதனாதியர்கள் அழியும்படியாக, ஒப்பற்ற பாண்டவர்களுக்காகத் தேசம் எல்லாம் அறியும்படி ஒப்பற்ற சாரதியாய்ச் சென்று, சேனையை அழித்துத் தன்னுடையச்சோதிக்கு எழுந்தருளின நல்வார்த்தையை அறிந்தும், அவனுடைய ஆச்சரியமான செயல்களை அறிகின்றவர்கள் மாயவனுக்கு அடிமை ஆவரே ஒழிய வேறு ஒருவர்க்கு அடிமை ஆவரோ? ஆகார்,’ என்றபடி.

    வி - கு :
‘மங்கச் சாரதியாய்ச் சென்று நாசஞ்செய்திட்டு நடந்த நல்வார்த்தை’ என்க. மாயம் - தன்னை அடைந்தவர்கட்குச் சுலபனாய் இருக்கும் ஆச்சரியம்.

    ஈடு :
ஒன்பதாம் பாட்டு. 3தன்னை அடைந்த பிரஹ்லாதனுக்காக நரசிங்கமான அதிலும் அதிக குணமான சாரதியாய் நின்ற செயலை அருளிச்செய்கிறார்.

______________________________________________________________

1. இத்திருப்பாசுரத்துக்கு ஏற்றத்தை அருளிச்செய்கிறார், ‘ஒருவன்’ என்று
  தொடங்கி.

2. தமப்பன் பகையானாலும் இவன் பாதுகாப்பான் என்பதற்குப் பிரமாணம்
  காட்டுகிறார், ‘பெற்றோர்’ என்று தொடங்கி. இது, பெரிய திருமொழி.
  8. 9 : 7.

3. ‘தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று’ என்றதனைக் கடாட்சித்து, மேல்
  திருப்பாசுரத்தைக்காட்டிலும் இத்திருப்பாசுரத்துக்கு ஏற்றம்
  அருளிச்செய்யுமுகத்தால் அவதாரிகை அருளிச்செய்கிறார்.