New Page 1
24 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
பொ - ரை :
அஃறிணைப்பொருள்களும் உயர்திணைப்பொருள்களும் ஒன்றும் இல்லாமல் எல்லாவற்றையும் உன் வயிற்றிலே
ஒடுக்கிக்கொண்டு, ஒப்பற்றதான ஆலினது முகிழ் விரிந்து நீளும்படியான இலையின் மேலே சேர்ந்து திருக்கண்
வளர்ந்த குழவியே! வினையேனுடைய வினைகளைத் தீர்க்கின்ற மருந்தே! ஒப்பற்ற ஐந்து இந்திரியங்களையும்
காட்டி, உறுவதனை நான் அறியாத வகையாகச் சுழலச்செய்து, உனது அழகிய திருவடித் தாமரைகளை நான் சேராதபடி
செய்து கண்கள் காணாதபடி கடக்க நிற்கின்றாய்காண்.
வி - கு :
‘ஒடுக்கிச் சேர் குழவி’ என்க. ஐவரைக் காட்டி அறியா’ வகை சுழற்றி அணுகா வகை செய்து போதி’
என்க. சூது - உறுவது.
ஈடு : நான்காம்
பாட்டு. 1‘நீயே இவ்வாத்துமாவுக்குத் தனக்கு மேல் ஒன்றில்லாததான புருஷார்த்தம்
என்னமதை யான் அறியாதபடி ஐம்புலன்களைக் காட்டி என்னை மயக்குவிக்கின்றாய்,’ என்கிறார்.
சூது - ‘இந்த ஆத்துமாவுக்கு
விஷயத்தில் ஈடுபட்டிருத்தல் நாசத்திற்குக் காரணம்; பகவானுடைய அனுபவம் உய்வதற்குக் காரணம்’
என்னும் உபாயத்தை. சூது - உறுவது. நான் அறியாவகை - இது நான் அறியாதபடி. ஓர் 2ஐவரைக்
காட்டி சுழற்றி- நான் உறுவது அறியாதபடி 3சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் விஷயங்களைக்
காட்டி மயங்கச் செய்து. என்றது, ‘உன்மத்தங்காய் தின்னப்பண்ணி’ என்றபடி. உன்னடிப்போது நான்
அணுகா வகை செய்து - உன் திருவடிகளாகிற செவ்விப்பூக்களை நான் கிட்டாதபடி செய்து. என்றது,
4‘மயிர் கழுவி இருக்கிறவனைச்
_______________________________________________________________________
1. ‘சூது நான் அறியாவகை’
என்பதனையும், ‘ஐவரைக் காட்டி’ சுழற்றி, போதி கண்டாய்’
என்பதனையும் திருவுள்ளம் பற்றி அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. ஈண்டு, ‘ஐவர்’ என்றது,
ஐம்புலன்களை.
3. ‘சுவை ஒளி யூறோசை நாற்றமென்
றைந்தின்’
என்பது, திருக்குறள். உன்மத்தங்காய்
தின்னப் பண்ணுகையாவது, அவற்றிலே இன்பம்
உண்டு என்ற புத்தியைப் பிறப்பித்து நெஞ்சமானது கலங்கும்படி
செய்தல்.
4.
‘அடிப்போது’ என்று, திருவடிகளை மலராக உருவகம் செய்ததற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘மயிர்
கழுவி’ என்று தொடங்கி. ஆழ்வாராகிய தாம் திருவடிகளை
அடைவது எப்போதோ என்று பிரபத்தி செய்திருக்கிற
தன்மையை நினைத்து, ‘மயிர்
கழுவி இருக்கிறவனை’ என்கிறார். இப்படி இருக்கிற தமக்கு, ஈஸ்வரன்
தன்
திருவடிகளில் அனுபவ கைங்கரியங்களைக் கொடாமையைத் திருவுள்ளம் பற்றிச்
‘செவ்விப்பூச்சூடாமல்
தடுப்பாரைப் போலே’ எனகிறார்.
|