716
ஐந்தாந்திருவாய்மொழி - பா.
10 |
241 |
716
வார்த்தை அறிபவர்
மாயவற்கு
ஆளன்றி
ஆவரோ?
போர்த்த பிறப்பொடு
நோயொடு
மூப்பொடு
இறப்பிவை
பேர்த்துப்
பெருந்துன்பம் வேரற
நீக்கித்தன்
தாளின்கீழ்ச்
சேர்த்துஅவன் செய்யும்
சேமத்தை
எண்ணித்
தெளிவுற்றே.
பொ - ரை :
‘ஆத்துமசொரூபம் தெரியாதபடி மறைத்துக்கொண்டிருக்கிற பிறப்பும் நோயும் மூப்பும் இறப்பும் என்னும்
இவற்றை நீக்கிப் பெரிய நரகத்துன்பத்தையும் அடியோடு நீக்கித் தன் திருவடிகளின் கீழே நித்தியமான
கைங்கரியத்தைக் கொடுத்து, அவன் செய்கின்ற சேமத்தை எண்ணித் தெளிவை அடைந்து, அவனுடைய
வார்த்தையை அறிகின்றவர்கள், அக்கண்ணபிரானுக்கு அடிமை ஆவரே அன்றி மற்று ஒருவர்க்கு ஆள்
ஆவரோ?’ என்றபடி.
வி - கு :
வார்த்தையாவது, ‘என்னையே சரணமாகப் பற்று; நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் நீக்குகிறேன்,’
என்ற பகவத் கீதை வாக்கியம். ‘பேர்த்து நீக்கிச் சேர்த்துச் செய்யும் சேமம்’ என்க. (
அதனை) எண்ணித் தெளிவுற்று அறிபவர் என்க.
ஈடு : பத்தாம்
பாட்டு. 1மேலே சேதநர்க்குச் செய்த உபகாரங்கள் எல்லாம் சம்சாரத்திலே இருக்கச்செய்தே
செய்தவை அன்றோ? அவை போன்றது அன்றி, சம்சாரம் மறுவல் இடாதபடி செய்து தன் திருவடிகளிலே சேர்த்துக்கொண்டது
ஒரு மஹோபகாரத்தை அருளிச்செய்கிறார்.
வார்த்தை அறிபவர்
- 2மஹாபாரதம் எல்லாவற்றாலும் சொல்லிற்றாயிற்றது ஒருவார்த்தை அன்றோ?
3வார்த்தையாவது, பிரயோ
__________________________________________________
1. பின் மூன்று அடிகளையும்
கடாட்சித்து இத்திருப்பாசுரத்துக்கு ஏற்றம்
அருளிச்செய்யுமுகத்தால் அவதாரிகை அருளிச்செய்கிறார்.
‘மேலே’ என்றது,
முதல் மூன்று திருப்பாசுரங்களும், ஏழாந்திருப்பாசுரமும் ஒழிந்த மற்றை
ஐந்து திருப்பாசுரங்களையும்.
அந்தத் திருப்பாசுரங்கள் நான்கிலும்
சொன்னவை சம்சாரத்தில் இருக்கும்போதே செய்தவை அல்ல;
இந்த ஐந்து
திருப்பாசுரங்களிலும் கூறியவை சம்சாரத்தில் இருக்கும்போதே செய்தவை.
2. ‘வார்த்தை’ என்ற
ஒருமைக்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘மஹாபாரதம்’
என்று தொடங்கி.
3. ‘அது எப்படி?’ என்ன,
‘வார்த்தையாவது’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
|