ஜனத
|
242 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
ஜனத்தோடு கூடி இருப்பது
அன்றோ? 1‘என் ஒருவனையே சரணமாகப் பற்று,’ என்றதனை அன்றோ இங்கு வார்த்தை என்கிறது?
3மேலே சொன்னவை அடங்கலும் கடல் போலே; அதில் அமிருதம் போலே இது. மாயவற்கு
ஆள் அன்றி ஆவரோ- 3அவன் ‘என்னையேபற்று’ என்று சொல்லாநின்றார், இவர்கள்
அவனை ஒழியவும் பற்றுவார்களோ? 4இரஹஸ்யங்கள் எல்லாவற்றையும் வெளியிட்டான் அன்றோ
அவள் சூழல் முடிக்கைக்காக?
போர்த்த பிறப்பொடு
நோயொடு மூப்பொடு இறப்பு இவை - பரணி, கூடு வரிந்தாற்போலே, இவ்வாத்துமாவை அறிய ஒண்ணாதபடி
சூழப் பொதிந்து கிடக்கிற பிறவிகள், அவை புக்க இடத்தே புகக்கடவ நோய், அங்ஙனேயாகிலும் சிலநாள்
செல்லாதபடி இடி விழுந்தாற்போலே நிற்கிற முதுமை, அங்ஙனேயாகிலும் இருக்க உண்ணாதபடி இவனுக்கு
விருப்பம் இல்லாத இறப்பு, இவற்றை எல்லாம். பேர்த்து - 5ஈஸ்வரனுக்கு ஒரு விரகு
பார்த்துத் தள்ள வேண்டும்படி அன்றோ அவற்றின் கனம், விரகர் நெடுஞ்சுவர் தள்ள மாறுபோலே தள்ளி?
பெருந்துன்பம் வேர் அற நீக்கி - பிறவி போனால்
_____________________________________________________________________
1. ‘அவ்வார்த்தை தான்
யாது?’ என்ன, ‘என் ஒருவனையே’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘ஸர்வ தர்மாத் பரித்யஜ்ய
மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ
பாபேப்ய; மோக்ஷயிஷ்யாமி மாஸூச:’
என்பது, ஸ்ரீ கீதை, 18 : 66.
2. ‘பிரயோஜனத்தோடு கூடி
இருப்பதன்றோ?’ என்று மேலே அருளிச்செய்த
வாக்கியத்தைத் திருஷ்டாந்தத்தோடு விவரிக்கிறார்,
‘மேலே’ என்று தொடங்கி.
‘இது’ என்றது, சரமஸ்லோகத்தை.
3. ‘அவன் அருளிச்செய்த
வார்த்தை அறிந்தால் வேறு ஒருவருக்கு ஆளாக
ஒண்ணாதோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அவன் என்னையே’
என்று தொடங்கி. அவன்-பரம ஆப்தன்; கிருஷ்ணன்.
4. ‘மாயவன்’ என்பதற்குப்
பொருள் அருளிச்செய்கிறார். ‘இரஹஸ்யங்கள்’ என்று
தொடங்கி. மாயவன்-பெரிய காதலையுடையவன்.
அவள்-திரௌபடி. பரணி-ஒரு
பூச்சி விசேடம்; இது தன் உடலிலிருந்து நூலை இடும்.
5. ‘போர்த்து’
என்பதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘ஈஸ்வரனுக்கும்’ என்று
தொடங்கி. போக்கும் விதத்தை
அருளிச்செய்கிறார், ‘விரகர்’ என்று தொடங்கி.
|