முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

244

திருவாய்மொழி - ஏழாம் பத்து

சொன்னதில், தலையாடியிலே, ‘எல்லா விரோதிகளையும் நானே போக்கி என்னைத் தருவான்’ என்று சொன்னதனைத் தெளிந்திருக்குமவர்கள்; அவனுக்கு அல்லது ஆள் ஆவரோ? 1மேலே கூறிய குணங்கள் எல்லாம், ‘மண் தின்ன வேணும்’ என்று அழுத குழந்தைக்கு அதனை இட்டு அதற்குப் பரிஹாரம் பண்ணுமாறு போலே ஆயிற்று; இங்கு, இவற்றினுடைய ஹிதமே பார்த்துச் சம்சாரம் தொடக்கமான எல்லாத் துன்பங்களும் மறுவலிடாதபடி போக்கித் தன் திருவடிகளின் கீழே வைத்துக் காத்த பெரிய நீர்மைக்குப் போருமோ மேலே கூறியவை அடங்கலும்?

    2
மேலே செய்த பரிஹாரங்கள் கிரந்தி கிடக்கச் செய்யும் பரிஹாரம் போலே சம்சாரம் கிடக்கச் செய்த பரிஹாரங்கள் அன்றோ? அது புண் இல்லாதபடி அறுத்து நோக்குவாரைப்போலே இதிற் சொல்லுகிற குணம். 3மேற்கூறியவை சம்சாரிகள் இச்சையாலே செய்தவை; இது ஈஸ்வரன் தன்னிச்சையாலே செய்ததன்றோ?

(10)

                   717

        தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு
             இன்பக் கதிசெய்யும்
        தெளிவுற்ற கண்ணனைத் தென்குரு
             கூர்ச்சட கோபன்சொல்
        தெளிவுற்ற ஆயிரத் துள்இவை
             பத்தும்வல் லார்அவர்
        தெளிவுற்ற சிந்தையர் பாமரு
             மூவுல கத்துள்ளே.

________________________________________________

ஸ்லோகத்தின் பின்னடியின் பொருளை எண்ணித் தெளிவுற்று, ‘என்னையே
உபாயமாகப் பற்று’ என்று அருளிச்செய்த சரமஸ்லோகத்தின் முன்னடியின்
பொருளை அறிந்தவர்கள் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்றபடி.
இதனால், ‘வார்த்தை’ என்றது, சரமஸ்லோகத்தின் முன்னடியினை. மற்றை
மூன்று அடிகளும் சரமஸ்லோகத்தின் பின்னடியின் பொருள். தலையாடி
-சரமஸ்லோகத்தின் பின்னடி.

1. முன்னுரையில் இத்திருப்பாசுரத்திற்கு ஏற்றம் அருளிச்செய்தார் அன்றோ?
  அந்த ஏற்றத்தைத் திருஷ்டாந்தம் காட்டி விவரிக்கிறார், ’மேலே’ என்று
  தொடங்கி. ‘மேலே’ என்றது, ஸ்ரீகீதையில், சரம ஸ்லோகத்துக்கு முன்னே
  கூறியவற்றை.

2. அந்த ஏற்றத்தை வேறு ஒரு முகத்தாலும் அருளிச்செய்கிறார், ‘மேலே
  செய்த’ என்று தொடங்கி. கிரந்தி-கட்டி.

3. மேலே ‘மண் தின்ன வேணும்’ என்று தொடங்கி அருளிச்செய்த
  வாக்கியங்களால் பலித்த பொருளை அருளிச்செய்கிறார், ‘மேற்கூறியவை’
  என்று தொடங்கி.