New Page 1
ஆறாந்திருவாய்மொழி -
பா. 1 |
251 |
போலே, புறம்பே குணங்கள்
சிலவற்றைக் கண்டால், பெருமாள் பக்கல் குணம்’ என்று இட்டாயிற்று அங்கு விலை போவது, ‘இவ்வடித்தில்
குணம்’ என்றாயிற்றுப் புறம்பு விலைபோவது; இப்படிப்பட்டவனுடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிடுகிறார்.
718
1பாமரு
மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும்
அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணா
வோ!தனி யேன்தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ!
உன்னை என்றுகொல் சேர்வதுவே?
பொ - ரை :
‘பரப்பையுடைய மூன்று உலகங்களையும் உண்டாக்கின திருவுந்தித் தாமரையையுடையவனே! பரப்பையுடையவான
மூன்று உலகங்களையும் அளந்து தாமரை போன்ற திருவடிகளையுடையவனே! தாமரை போன்ற திருக்கண்களையுடையவனே!
தாமரை போன்ற திருக்கரங்களையுடைவனே! தனியேனாய் இருக்கின்ற என்னைத் தனித்து ஆளுகின்றவனே!
உன்னைச் சேர்வது என்றுகொல்?’ என்கிறார்.
வி-கு :
‘பற்பநாபன், பற்பபாதன், தாமரைக் கண்ணன், தாமரைக் கையன்’ என்பனு, 2விளி ஏற்றலின்
ஈறு கெட்டு அயல் நீண்டு ஓகாரம் பெற்று வந்தன. ஓகாரங்கள், துக்கத்தின் மிகுதியைக் காட்ட வந்தன.
‘பத்மம்’ என்பது, ‘பற்பம்’ எனத் திரிந்தது.
இத்திருவாய்மொழி,
கலிநிலைத்துறை.
ஈடு : முதற்பாட்டு.
3‘உலகத்தைப் படைத்தல் முதலாயினவற்றைச் செய்து உபகரித்து எல்லையற்ற இனியனாய்
இருக்கிற
_______________________________________________________________
1. ‘பெரியவனை மாயவனைப்
பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை
விண்ணவனை’
‘மூவுலகும் ஈரடியால்
முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி’
என்பது, சிலப்பதி. ஆய்ச்சியர்
குரவை.
2. ‘கரனிருந்த வனமன்றோ
இவைபடவுங் கடவேனோ
அரனிருந்த மலையெடுத்த
அண்ணாவோ அண்ணாவோ’
என்பது, கம்பராமா. சூர்ப்பணகைப்பட.
109.
3. ‘பாமரு
மூவுலகும் படைத்த, பாமரு மூவுலகும் அளந்த தாமரைக்
கண்ணாவோ, தாமரைக் கையாவோ’ என்பனவற்றைக்
கடாட்சித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|