முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

உள

ஆறாந்திருவாய்மொழி - பா. 2

257

உள்ளவர்கள் பிரமன் முதலாயினாரும் தத்தம் தொழில்களிலே நோக்கு இல்லாதவர்களாய் ஏத்தும்படி விரும்பத் தக்கனவாய்ச் சிவந்திருந்துள்ள உன் திருவடிகளை, வேறு ஒன்றிலும் நோக்கு இல்லாத நான் கிட்டப்பெறுவது என்றோ? அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப்பாதத்தை யான் என்றுகொல் சேர்வது?

    நிலம் நீர் எரி கால் விண் உயிர் என்ற இவை முதலா முற்றுமாய் நின்ற-1பெற்ற பின்பு நோக்குகை அன்றிக்கே, ‘குழந்தையைப் பெற வேணும்’ என்று ஏற்கவே வருந்தும் தாயைப் போலே, படைப்பதற்கு முன்பே இவற்றை உண்டாக்குகைக்காகத் 2திருவ்ருத்கரணத்தை நினைத்துப் பஞ்சீகரணத்தைச் செய்து, இவற்றை அடையப் படைத்து, 3படைக்கப்பட்ட பொருள்கள் பொருளாந்தன்மையைப் பெறுதல், பெயரை அடைதல் முதலியவைகளுக்காக உயிர் வழியாக அநுப்பிரவேசித்து, பின்னர், இவற்றைச் சொல்லுகிற சொற்கள், அசித்தும் அசித்தை விரும்பி நிற்கிற உயிரும் உயிருக்குள் உயிராய் இருக்கிற பரமாத்துமாவுமான இக்கூட்டத்தைச் சொல்லுகின்றன வாய்க் கொண்டு, தன்னளவிலே வரும்படி நிற்கிற நிலையைச் சொல்லுகிறது, ‘முற்றுமாய் நின்ற’ என்னும் இதனால். 4இவை அறியாது இருக்க, இவற்றின் பேற்றுக்கு அவன் வருந்த வேண்டுவதற்கு உரிய காரணத்தைச் சொல்லுகிறது, ‘எந்தாய்’ என்ற இதனால். என்றது, ‘அதற்கு அடியான சம்பந்தத்தைச் சொல்லுகிறது’ என்றபடி. 5இவற்றை உண்டாக்கும் நாளிலே உண்டாக்கி,

___________________________________________________________________

1. படைத்த பின்பு பாதுகாத்தலைச் செய்கை அன்றிக்கே, படைத்தலையும் இவனே
  செய்தான் என்னுமதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘பெற்ற பின்பு’ என்று
  தொடங்கி.

2. இவற்றை முன்னைய பத்துகளில் விளக்கியிருக்கிறேன்.

3. ‘முற்றுமாய் நின்ற’ என்றது, ‘சொரூப ஐக்கியத்தைச் சொல்லுகிறது அன்று’
  அநுப்பிரவேசத்தால் வந்த பிரகார பிரகாரி பாவத்தைச் சொல்லுகிறது,’ என்கிறார்,
  ‘படைக்கப்பட்ட’ என்று தொடங்கி.

4. ‘ஏந்தாய்’ என்றதற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘இவை அறியாதிருக்க’
  என்று தொடங்கி.

5. ‘குன்று எடுத்து’ என்பதற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘இவற்றை’ என்று
  தொடங்கி.