முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

258

திருவாய்மொழி - ஏழாம் பத்து

‘இனிமேல் வரும் ஆபத்தை இவை தாமே நீக்கிக்கொள்கின்றன,’ என்று விட்டு வைக்கை அன்றிக்கே, அரியன செய்தும் நோக்குமவன் என்கிறார் மேல்:

    குன்று எடுத்து - மலையை எடுத்தே அன்றோ நோக்கிற்று? ஆநிரை மேய்த்து-நோக்குமிடத்து, வரையாதே பசுக்களை நோக்குமவனாயிற்று. அவை காத்த எம் கூத்தாவோ - 1மழையிலே நோவு படுகிற பசுக்களைப் பாதுகாப்பதற்காக மலையை எடுத்தான் அவன்; அப்போது திரிபங்கியாய் நின்ற வடிவுதான் வல்லார் ஆடினாற் போலே தமக்குக் கவர்ச்சிகரமாயிருக்கையாலே, ‘எம் கூத்தாவோ’ என்கிறார்.

    2
ஆக, இந்த இரண்டு பாசுரங்களாலும் அவன் விரும்பப்படுகின்றவனாக இருக்கும் தன்மையைச் சொல்லும் முகத்தால், பிராப்பியத்துவம் சொல்லப்பட்டது: மேல் ஐந்து பாசுரங்களாலே, அவனுடைய பிராபகத்துவம் சொல்லப்படுகிறது.

(2)

                   720

        காத்தஎங் கூத்தாவோ! மலைஏந்திக்
             கன்மாரி தன்னைப்
        3பூத்தண் துழாய்முடி யாய்!புனை
             கொன்றையஞ் செஞ்சடையாய்
        வாய்த்தஎன் நான்முக னே!வந்து என்
             ஆருயிர் நீஆனால்
        ஏத்தருங்க கீர்த்தியி னாய்!உன்னை
             எங்குத் தலைப்பெய்வனே?

   
பொ-ரை : ‘மலையை ஏந்திக் கல்மழையைத் தடுத்துப் பசுக்களைப் பாதுகாத்த எம் கூத்தனே! குளிர்ந்த பூக்களையுடைய திருத்துழாயினைத் தரித்த திருமுடியையுடையவனே! கொன்றை மாலையை அணிந்த அழகிய சிவந்த சடையையுடைய சிவபெருமானைச் சரீரமாகவுடைய

_________________________________________________

1. ‘அவை காத்தவனே’ என்னாமல், ‘எம் கூத்தாவோ’ என்றதற்குக் கருத்து
  அருளிச்செய்கிறார், ‘மழையிலே’ என்று தொடங்கி.

2. அவதாரிகையில் அருளிச்செய்த பிராப்பிய பிராபகங்களுக்கு வாசகமான
  திருப்பாசுரங்கள் இத்தனை என்கிறார், ‘ஆக’ என்று தொடங்கி.

3. ‘ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல்
  மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ
  நலமுழு தளைஇய புகர்அறு காட்சிப்
  புலமும் பூவனும் நாற்றமும் நீ
  வலனுயர் எழிலியும் மாக விசும்பும்
  நிலனும் நீடிய இமயமும் நீ’


என்ற பரிபாடற்பகுதி ஈண்டு ஒப்பு நோக்குக.