இங
ஆறாந்திருவாய்மொழி -
பா. 4 |
263 |
இங்ஙனே இருந்த பின்பு,
உன்னை எங்குத் தலைப்பெய்வனே-யான் ஓர் உபாயத்தைச் செய்து உன்னை எங்கே வந்து கிட்டப்
புகுகிறேன்? என்னாலே வந்து கிட்டுகை என்று ஒன்று உண்டோ?
(3)
721
எங்குத்தலைப் பெய்வன்நான்!
எழில்மூ வுலகும் நீயே
1அங்குஉயர்
முக்கண்பிரான் பிரம பெருமான் அவன்நீ
வெங்கதிர் வச்சிரக்கை
இந்திரன் முதலாத் தெய்வம்நீ
கொங்கலர் தண்
அந் துழாய்முடி என்னுடைக் கோவலனே!
பொ - ரை :
தேனோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயைத்
தரித்த திருமுடியையுடைய என்னுடைய கோபாலனே! அழகிய மூன்று உலகங்களும் நீ இட்ட வழக்கே; அவ்வுலகங்களிலே
ஞானம் சத்தி முதலியவற்றால் உயர்ந்த மூன்று கண்களையுடைய சிவனும் அவனுக்குத் தந்தையாகிய பிரமனும்
அவனும் நீ இட்ட வழக்கு; கொடிய கிரணங்களையுடைய வச்சிராயுதத்தைக் கையிலேயுடைய இந்திரன் முதலான
தெய்வங்களும் நீ இட்ட வழக்கு; இங்ஙனம் இருக்க, நான் உன்னை எங்கே வந்து கிட்டுவேன்?
வி - கு :
‘பெருமானாகிய பிரமன் அவன்’ என்க, கோவலன் என்பது, ‘கோபாலன்’ என்ற சொல்லின் சிதைவு என்பர்
அடியார்க்கு நல்லார்.
ஈடு :
நான்காம் பாட்டு. 1மேற்பாசுரத்தில், ‘அவர்கள் சொரூபம் அவன் அதீனம்’ என்றது;
அந்தச் சொரூபத்தைப் பற்றி இருப்பன சில உயர்வுகள் உளவே அன்றோ? அவையும் அவனுக்கு அதீனங்கள்
என்கிறது இதில்.
2எங்குத்
தலைப்பெய்வன் நான் - 3வலி இல்லாதான் ஒருவனை ‘மலையைத் தாங்கு’ என்றால், அவனாலே
அது செய்து தலைக்கட்டப்
_____________________________________________________________
1. திருப்பாசுரம் முழுதினையும்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. துன்பத்தின் மிகுதியாலே
மீண்டும், ‘எங்குத் தலைப்பெய்வன்?’ என்கிறார்.
3. ‘நான் எங்குத் தலைப்பெய்வன்?’ என்று தம்முடைய அசத்தியைச்
சொல்லுகிறவருடைய கருத்தை அருளிச்செய்கிறார்,
‘வலி இல்லாதான்’ என்று
தொடங்கி.
|