722
ஆறாந்திருவாய்மொழி -
பா. 5 |
265 |
722
என்னுடைக் கோவலனே!
என்பொல்
லாக்கரு
மாணிக்கமே!
உன்னுடைய உந்திமலர்
உலக
மவைமூன்
றும்பரந்து
உன்னுடைச் சோதிவெள்ளத்து
அகம்பால்
உன்னைக்
கண்டுகொண்டிட்டு
என்னுடை ஆர்உயிரார்
எங்ஙனே
கொல்வந்து
எய்துவரே?
பொ-ரை :
‘என்னுடைய கோபாலனே! என்னுடைய பொல்லாக் கருமாணிக்கமே! உன்னுடைய திருவுந்தித்தாமரையில் பிறந்த
உலகங்களிலே சத்துவம் இராஜசம் தாமதம் என்னும் முக்குணங்களைப் பற்றி வருகின்ற விஷயங்களிலே
பரந்து அனுபவிக்கின்ற என் அரிய உயிரானவர், உன்னுடைய சோதி வெள்ளமான ஸ்ரீவைகுண்டத்திலே எழுந்தருளியிருக்கிற
உன்னைக் கண்டுகொண்டு வந்து அடைவது எங்ஙனே கொல்?’ என்கிறார்.
வி-கு :
‘மூன்று’ என்பது, முக்குணங்களைக் குறிக்கின்றது ‘பரந்து’ என்ற சொல்லுக்குப் பின்
‘அனுபவிக்கின்ற’ என்ற சொல்லைக் கொணர்ந்து கூட்டுக. ‘பரந்து அனுபவிக்கின்ற என் ஆர் உயிரார்’
என்க. உயிரார் - இகழ்ச்சிக்குறிப்பு.
ஈடு :
ஐந்தாம் பாட்டு. 1‘எல்லாம் செய்தாலும் ‘சாஸ்திர பரம் பிரயோக்தரி’ அன்றோ?
பலம் உம்மதான பின்பு நீரும் சிறிது முயற்சி செய்யவேணுங்காணும்,’ என்ன, நீ படைத்த உலகங்களிலே
விஷயங்கள்தோறும் அகப்பட்டுக் கிடக்கிற நான் உன்னைப் பெறுகைக்கு ஒரு சாதனத்தைச் செய்து வந்து
பெறுகை என்று ஒன்று உண்டோ?’ என்கிறார்.
என்னுடையக் கோவலனே
- 2பாண்டவர்களுடைய கோவலன் ஆனாற்போலே ஆயிற்று: இது சீலம் இருந்தபடி. என்
பொல்லாக்
__________________________________________________
1. ‘எல்லாம் செய்தாலும்’
என்றது, ‘சொரூபம் என்ன, உயர்வுகள் என்ன, ஆகிய
இவைகள் என்னுடைய அதீனமாய் இருந்தவேயாகிலும்’
என்றபடி.
‘சாஸ்திரபலம் பிரயோக்தரி’ என்றது, ‘சாஸ்திரம் பயனுடைத்தாவது இவன்
கர்த்தாவாகும்போது’ என்றபடி. இரண்டாம் அடியையும் நான்காம்
அடியையும் கடாட்சித்து, ‘நீ படைத்த’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார்.
2. ‘பாண்டவர்களுடைய
கோவலன் ஆனாற்போலே’ என்றது, ‘இன்னாருடைய
மனிதன்’ என்னுமாறு போலே என்று திருஷ்டாந்தம் என்றபடி.
‘இன்னார்
தூதன் என நின்றான்’ என்பது திருமங்கை மன்னன் திருமொழி.
இதனால் பலித்த பொருளை அருளிச்செய்கிறார், ‘இது சீலம் இருந்தபடி’
என்று.
|