முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

266

திருவாய்மொழி - ஏழாம் பத்து

கருமாணிக்கமே-இது வடிவழகு இருந்தபடி. 1 ‘அழகிது’ என்னில், உலகத்தோடு ஒப்பாம் என்று பார்த்து, வேறு சொல்லாலே சொல்லுகிறாராதல்; அன்றியே ‘தொளையா மணி’ என்கிறாராதல். பொல்லல்-தொளைத்தல். 2 ‘அனுபவிக்கப்படாத இரத்தினம் போலே’ என்றபடி. ‘உன்னுடை உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து - 3உன்படி இதுவாய் இருக்க, உன்னை ஒழிந்த விஷயங்களினுடைய வடிவழகிலும் குணங்களிலும் கால் தாழ்ந்து போந்தவனாய் இருந்தேன் நான். 4உன்னடைய உந்தியிலே மலராநின்றுள்ள உலகங்கள் மூன்றிலும் உண்டான விஷயங்கள்தோறும், 5தனித்தனியே அற்றுக் கால் தாழ்ந்து போந்தவனாய் இருந்தேன் நான். நீ ஸர்வசத்தி யோகத்தாலே பரந்திருக்கும் இடம் முழுதும் நான் என்னுடைய ஆசையாலே கால் தாழ்ந்து திரிந்தேன். 6இது என் நிலை இருந்தபடி. அதற்கு மேலே நீ எட்டா நிலத்தை இருப்பிடமாகவுடையையாய் இருந்தாய்.

    உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு-உனக்கே சிறப்பாய் எல்லை அற்ற ஒளி உருவமாய், 7‘சூரியன் அக்கினி ஆகிய இவர்களின் ஒளியைக்காட்டிலும்

____________________________________________________________________

1. ‘வடிவழகினைச் சொன்னால் ‘பொல்லா மணி’ என்பான் என்?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘அழகிது என்னில்’ என்று தொடங்கி.

2. தொளையா மணி என்ற பொருளால் போதரும் பொருளை அருளிச்செய்கிறார்,
  ‘அனுபவிக்கப்படாத’ என்று தொடங்கி.

3. ‘உன்னுடை உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து’ என்கிறவருடைய கருத்தை
  அருளிச்செய்கிறார், ‘உன் படி’ என்று தொடங்கி. ‘படி’ என்பது சிலேடை.
  ‘கருமாணிக்கம்’, என்னுடைக் கோவலன்’ என்பனவற்றால் கிடைக்கும்
  வடிவழகுக்கும் குணங்களுக்கும் எதிர்த்தட்டாக அருளிச் செய்கிறார், ‘உன்னை
  ஒழிந்த’ என்று தொடங்கி.

4. பதங்கட்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘உன்னுடைய உந்தியிலே’ என்று தொடங்கி.

5. ‘பரந்து’ என்றதன் பொருள், ‘தனித்தனியே’ என்று தொடங்குவது, அதனை விவரணம்
  செய்கிறார், ‘நீ’ என்று தொடங்கி.

6. ‘இது என் நிலை இருந்தபடி’ என்றது, ‘சாதந அநுஷ்டானம் முன்னான விரக்தியும்
  இல்லை’ என்றபடி. மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘அதற்கு மேலே’
  என்று தொடங்கி.

7. ‘அத்யர்க்காநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோ: மஹாத்மந:
   ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ்ப்ரேக்ஷம் தேவதாநவை;’

என்பது, பாரதம், ஆரண்ய பர். 163.