அத
ஆறாந்திருவாய்மொழி -
பா. 6 |
267 |
அதிகமாக விளங்குகிற,
மஹாத்துமாவான நாராயணனுடைய வைகுண்டம்’ என்று சொல்லப்படுகிற ஸ்ரீவைகுண்டத்தை இருப்பிடமாகவுடையையாய்
இருக்கிற உன்னை, சரீரத்திலும் சரீரத்தோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் உண்டான சம்பந்தம்
அற்று நெடுந்தூரம் வழி வந்து அதற்குத் தக்கதாய் இருப்பது ஒரு சரீரத்தை மேற்கொண்டு பரமபதத்தை
அடைந்தால் அனுபவிக்க வேண்டி இருந்தது; 1ஆக, என் நிலை இருந்தபடி இது; உன் நிலை
இருந்தபடி அது; 2என் நெஞ்சில் ஈடுபாடு இருந்தபடி இது; ஆன பின்பு இந்த முதலியார்
கடுக வந்து உன்னைக் கிட்டாரோ? 3ஆக., சொரூபம் உன் அதீனமாய் இருந்தது, அவர்
அவர்களுடைய உயர்வுகளும் உன் அதீனமாய் இருந்தன; என் நிலை இது, உன் நிலை அது; என் நெஞ்சில்
ஈடுபாடு இது; ஆன பின்பு, நான் ஒரு சாதனத்தைச் செய்து வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’
என்கிறார்.
(5)
723
வந்துஎய்து மாறுஅறியேன்
மல்கு
நீலச்
சுடர்தழைப்பச்
செஞ்சுடர்ச்
சோதிகள் பூத்துஒரு
மாணிக்கம்
சேர்வதுபோல்
அந்தரமேற் செம்பட்டோடு
அடிஉந்தி
கைமார்பு
கண்வாய்
செஞ்சுடர்ச்
சோதி விடஉறை
என்திரு
மார்பனையே.
பொ-ரை :
‘செறிந்த நீலச் சுடரானது பரவச் சிவந்த சுடர்ச் சோதிகள் மலர்ந்து ஒரு நீல இரத்தினம் சேர்வது
போன்று, திருவரையின் மேலே அணிந்திருக்கிற செம்பட்டோடு திருவடிகளும் திருவுந்தியும் திருக்கைகளும்
திருமார்பும் திருக்கண்களும் திருவாயும் சிவந்த சுடர்ச் சோதியைப் பரப்ப எழுந்தருளியிருக்கின்ற
என் திருமார்பனை நான் சென்று கிட்டும் வழியை அறியேன்,’ என்றவாறே.
__________________________________________________
1. மேலே அருளிச்செய்த அர்த்தங்களையெல்லாம்
நிகமித்துக் கொண்டு,
‘என்னுடை ஆர் உயிரார் எங்ஙனேகொல் வந்து எய்துவரே?’ என்பதற்குப்
பொருள் அருளிச்செய்கிறார், ‘ஆக என் நிலை’ என்று தொடங்கி.
2. ‘என் நிலை இருந்தபடி
இது’ என்றதனை விவரணம் செய்கிறார், ‘என்
நெஞ்சில்’ என்று தொடங்கி.
3. மேல்
இரண்டு திருப்பாசுரங்களின் பொருள்களையும் கூட்டிக் கொண்டு,
மேலே அருளிச்செய்த மூன்று வாக்கியங்களை
விவரணம் செய்கிறார்,
‘ஆக, சொரூபம்’ என்று தொடங்கி.
|