வ
|
268 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
வி-கு :
வந்து-இடவழுவமைதி. ‘செலவினும் வரவினும்’ (தொல்சொல்.) என்னும் பொதுச் சூத்திரத்தாற்கொள்க.
‘மார்பனை வந்து எய்துமாறு அறியேன்’ என்க. ‘தழைப்பப் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
சோதி விட உறை திருமார்பன்’ என்க.
ஈடு : ஆறாம்
பாட்டு. 1ஆனாலும், ‘ஏதேனும் ஒருபடி நீரும் சிறிது செய்து வந்து கிட்ட வேண்டாவோ?’
என்ன, ‘உன்னை வந்து கிட்டும் உபாயம் அறியேன்,’ என்கிறார்.
வந்து எய்துமாறு அறியேன்
- வந்து கிட்டும் உபாயத்தை அறியேன். என்றது, 2‘நீதானே மேல் விழுந்து உன்
வடிவழகைக் காட்டாநின்றால் அதனை விலக்காமைக்கு வேண்டுவது உண்டு; என்னால் உன்னை ஒரு சாதனத்தைச்
செய்து வந்து கிட்டப் போகாது,’ என்றபடி. 3‘ஆனால், இழந்தாலோ?’ என்ன, ‘இழக்கலாம்படியோ
உன் படி இருக்கிறது?’ என்கிறார். மல்கு நீலம் சுடர் தழைப்ப - 4வடிவழகு இல்லை என்று
விடவோ, பெறுவிக்கைக்குப் புருஷகாரம் இல்லை என்று விடவோ, எனக்கு ஆசை இல்லையாய் விடவோ
குறைவு அற்ற நீலப் புகரானது தழைப்ப? 5கர்மம் காரணமாக வந்தது அல்லாமையாலே மேன்மேலென
மிக்கு வருதலின், ‘தழைப்ப’ என்கிறார். என்றது, ‘இவ்வளவு என்ன ஒண்ணாதபடி மேன்மேலென
வளராநிற்கின்றது’ என்றபடி. நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து-சிவந்த சுடரையுடைத்தான ஒளியானது காலப்பூ
அலர்ந்தாற் போலே பூத்து. ஒரு மாணிக்கம் சேர்வதுபோல் - அனுபவத்திற்
____________________________________________________________________
1. ‘வந்து எய்துமாறு அறியேன்’
என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. ‘எய்துமாறு அறியேன்’
என்னாமல், ‘வந்து எய்துமாறு அறியேன்’ என்கையாலே,
‘விலக்காமைக்கு வேண்டுவது உண்டு என்று தோற்றுகிறது’
என்கிறார், ‘நீதானே’
என்று தொடங்கி.
3. மேலுக்கு அவதாரிகை
அருளிச்செய்கிறார், ‘ஆனால்’ என்று தொடங்கி.
4. ‘மல்கு நீலச் சுடர்
தழைப்ப’ என்றது முதல் ‘சோதி விட’ என்றது முடியக் கருத்து
அருளிச்செய்கிறார், ‘வடிவழகு’ என்று
தொடங்கி. ‘என் திருமார்வனை’ என்றதனை
நோக்கி, ‘பெறுவிக்கைக்கு’ என்று தொடங்கியும்,
‘வந்து எய்துமாறு அறியேன்’
என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘எனக்கு’ என்று தொடங்கியும்
அருளிச்செய்கிறார்.
5. ‘மல்கு நீலம்’ என்றவர், மீண்டும் ‘தழைப்ப’ என்பதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
‘கர்மம் காரணமாக’
என்று தொடங்கி.
|