முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

270

திருவாய்மொழி - ஏழாம் பத்து

மாயிற்றுப் பிராட்டி. 1‘நானும் மிக்க ஆயாசனத்தினால் பெருமாள் மடியில் தூங்கிக்கொண்டிருந்தேன்’ என்னக் கடவதன்றோ?

(6)

                       724

         என்திரு மார்பன் தன்னை என்மலைமகள் கூறன்தன்னை
         என்றும்என் நாமகளை அகம்பாற் கொண்ட நான்முகனை
         நின்ற சசிபதியை நிலங்கீண்டு எயில்மூன்று எரித்த
         வென்று புலன்துரந்த விசும்பா ளியைக்கா ணேனோ?

   
பொ-ரை : ‘என்னுடைய திருமகளை மார்பிலே கொண்ட திருமாலை, என்னுடைய பார்வதியை ஒரு பக்கத்திலேயுடைய சிவபெருமானுக்கு உள்ளுயிராய் இருப்பவனை, என்னுடைய சரஸ்வதியை எப்பொழுதும் தன்னிடத்திலே கொண்டவனான பிரமனுக்கு உள்ளுயிராய் இருப்பவனை, நின்ற இந்திரனுக்கு உள்ளுயிராய் இருப்பவனை, நிலத்தைக் கேட்டாலே குத்தி மேலே கொண்டு வந்து, முப்புரங்களை எரித்த, ஐம்புலன்களையும் வென்று ஓட்டிய சுவர்க்கலோகத்தை ஆளுகின்றவனைக் காணேனோ?’ என்கிறார்.

    வி - கு :
நிலங்கீண்டல், எயில் மூன்று எரித்தல், வென்று புலன் துரத்தல், விசும்பு ஆளுதல் என்னும் நான்கனையும், மேலே கூறிய நால்வர்க்கும் முறை நிரல் நிறையாகக் கொள்க. ‘என் திருமார்பனாய் நிலங்கீண்டவன், என் மலைமகள் கூறனாய் எயில் மூன்று எரித்தவன், நாமகளை அகம்பாற்கொண்ட நான்முகனாய் வென்று புலன் துரந்தவன், சசிபதியாய் விசும்பு ஆண்டவன்’ என்க. சசி-இந்திராணி.

    ஈடு :
ஏழாம் பாட்டு. 2உத்தேசிய லாபம் அவனாலேயாயிருந்தது. இத்தலையாலே முயற்சி செய்வதற்குத் தகுதி இல்லாதபடியான

_____________________________________________________________

1. ‘மலரான் தனத்துள்ளான்’ (மூன்றாந்திருவந். 3.) என்ன வேண்டியிருக்க,
  அவன் மார்விலே இருக்கிறான் எனக்கூடுமோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘நானும்’ என்று தொடங்கி.

    ‘பரிஸ்ரமாத் பர்ஸூப்தா ச ராகவாங்கே அஸ்மிஅஹம் சிரம்
     பர்யாயேண ப்ரஸூப்தஸ்ச மமஅங்கே பரதாக்ரஜ;’

என்பது, ஸ்ரீராமா, சுந். 38 : 20.

2. பிரமன் முதலாயினோரை அவர் அவர்ளுடைய மனைவிமார்களோடு
  சேர்த்துச் சொல்லுவதற்குக் கருத்து, ‘அவர் அவர்களுக்கு விருப்பமான
  விஷயங்களைச் சர்வேஸ்வரன் தலைக்கட்டிக் கொடுக்கிறான் என்பதே
  அன்றோ? ‘இப்படியே நாம் விரும்புகிற தன் திருவடிகளில் கைங்கரியத்தையும்
  நமக்குத் தருவான்’ என்று திருவுள்ளம் பற்றி, ‘உத்தேசிய லாபம்
  அவனாலேயாய் இருந்தது’ என்கிறார். ‘எயில் மூன்று எரித்து’ என்பது
  போன்றவைகளாலே, இவர்கள் செய்கிற தொழிலும் அவன் அதீனம்
  என்கையாலே, ‘தாம் ஒரு சாதனத்தைச் செய்வதற்குத்