முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

புலன

ஆறாந்திருவாய்மொழி - பா. 8

273

புலன் துரந்த-படைப்புக்கு உறுப்பாக ஐம்பொறிகளை அடக்கியவனை புலன்களை வென்று ஓட்டின விசும்பாளியை - சுவர்க்கத்தை வன்னியம் அறுத்து ஆளுகின்றவனை. காணேனோ - காணப்பெறேனோ?

    1
ஆகச் சொல்லிற்றாயிற்றது: உத்தேசிய லாபம் அவனாலேயாய் இருந்தது. அதற்கு உறுப்பான முயற்சியில் ஈடுபடுதற்குத் தகுதி இல்லாதபடி அதுவும் அவன் இட்ட வழக்காய் இருந்தது. 2இனி. இத்தலையாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் உண்டாய் இருந்தது; அவனாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் இன்றிக்கே இருந்தது. இப்படி இருக்கச்செய்தேயும் தம்மை இழந்து இருக்கக்கண்டார் ஆகையாலே, ‘இனி, இந்த இழவோடே இங்ஙனே முடிந்துபோமித்தனையே அன்றோ?’ என்று வருந்துகிறார்.

(7)

                  725

        ஆளியைக் காண்பரி யாய்அரி
             காண்நரி யாய் அரக்கர்
        ஊளைஇட்டு அன்றுஇலங் கைகடந்து
             பிலம்புக்கு ஒளிப்ப
        மீளியம் புள்ளைக் கடாய்விறன்
             மாலியைக் கொன்று பின்னும்
        ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்
             தானையும் காண்டுங்கொலோ?

   
பொ - ரை : ‘யாளியைக் கண்ட குதிரை போலவும், சிங்கத்தைக் கண்ட நரி போலவுமாகி அரக்கர்கள் கதறிக்கொண்டு அக்காலத்தில் இலங்கையை விட்டுப் பிலத்திலே சென்று மறைய, வலிய அழகிய கருடப் பறவையை நடத்திய வலிய மாலி என்றவனைக் கொன்று, பின்னும் உயர்ந்த பிண மலைகளாக வீரர்களைக் கொன்று குவித்து சர்வேஸ்வரனையும் காணக்கூடுமோ?’ என்கிறார்.

    வி - கு :
ஆளி வேறு: அரி வேறு. ‘ஒளிப்பக் கடாய் மாலியைக் கொன்று குன்றங்கள் செய்து அடர்த்தவன்’ என்க. அடர்த்தவன் - பெயர்.

__________________________________________________

1. ‘மேற்கூறியவற்றால் போதரும் பொருளை அருளிச்செய்கிறார், ‘ஆக’ என்று
  தொடங்கி.

2. செயல்களும் அவன் அதீனங்கள் என்கையாலே, பலித்த பாவத்தை
  அருளிச்செய்கிறார், ‘இனி இத்தலையாலே’ என்று தொடங்கி. திருவாய்மொழி,
  முதல் பத்து, முதல் திருவாய்மொழி, 6, 8 பாசுரங்களின்
  வியாக்கியானங்களைப் பார்க்க.