ஈ
|
274 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
ஈடு :
எட்டாம் பாட்டு. 1‘மாலி தொடக்கமான பகைவர்கள் கூட்டத்தைக் கொன்றருளின சர்வேஸ்வரனைக்
காண வல்லோமே?’ என்கிறார். 2முதல் இரண்டு பாசுரங்களாலே பிராப்பியன் அவனே என்னும்
இடம் சொல்லி, மேல் ஐந்து பாசுரங்களாலே, பிராபகன் அவனே தன்னைப் பெறுகைக்கு என்னும் இடம்
சொல்லி. இப்பாசுரத்தாலும் அடுத்த பாசுரத்தாலும் பகைவர்களை அழிக்கின்ற அவனது தன்மையைச்
சொல்லி, தடைகளைப் போக்குவான் அவனே என்னும் இடத்தைச் சொல்லுகிறார்.
ஆளியைக் காண் பரியாய்
- யாளியைக் கண்ட குதிரை போலவும். அரி காண் நரியாய் - சிங்கத்தைக் கண்ட நரியைப்
போலவும். 3ஸ்ரீராமாயணத்தே, அந்த அரக்கர்கள் அஞ்சினபடியாகப் பல உதாரணங்களை இட்டுச்
சொல்லிப் போரக்கடவதன்றோ? இங்கே இரண்டு வகையாலே அதனைச் சூசிப்பிக்கிறார். பரி-குதிரை.
அரக்கர். ஊளை இட்டு -மேலே ‘நரி’ என்கையாலே அதற்குத் தகுதியாகச் சொல்லுகிறார். அன்று இலங்கை
கடந்து பிலம் புக்கு ஒளிப்ப - தூசித்தலையில் நேர் நின்று போர் புரிய ஆற்றல் இல்லாமையாலே
இலங்கையை விட்டுப் போய்ப் பாதாளத்திலே புக்கு ஒளிப்ப. என்றது, ‘புற்றுகள் எப்போதும் ஒக்கப்
பாம்பு பற்று அறாதவாறு போலே என்றும் ஒக்கு அரக்கர்கள் மாறாதே, ‘மாலி, சுமாலி, மால்யவான்’
என்றாற்போலே சொல்லப்படுகிறவர்கள் வாழ்ந்து போந்தவர்களாய், பெரிய திருவடி முதுகிலே வந்து
தோன்றி, அவர்களை அழித்தானாகச் சொல்லக்கடவது அன்றோ? அதனை இங்கே அருளிச்செய்கிறார்’
என்றபடி. 4கையில் ஆயுதம் போகட்
______________________________________________________________________
1. பின் இரண்டு அடிகளைக்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. மேல் திருப்பாசுரங்களோடு
இதற்கு இயைபு அருளிச்செய்கிறார், ‘முதல் இரண்டு’
என்று தொடங்கி. பிராப்பியன் - பற்றப்படுமவன்
பிராபகன்-பற்றுவதற்கு வழியாய்
இருப்பவன்.
3. ‘ஸ்ரீராமாயணத்தே’ என்றது,
வால்மீகி ராமாயணத்தில் உத்தரகாண்டத்தில், மாலி
சுமாலி இவர்களோடு போர் செய்வதனைக்
கூறும் இடத்தில் என்றபடி. இதனைக்
கம்பராமாயணம்,, உத்தரகாண்டத்தில், இலங்கையழித்த படலத்தால்
உணர்க.
4. ‘இலங்கையை
விட்டுப் போக வேண்டுவான் என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘கையில்’ என்று தொடங்கி.
உள்ளே பட்டுப்போனாருமாய்
-இலங்கைக்குள்ளே பட்டுப் போனாருமாய். சிந்தாமணி, மண்மகளிலம்பகம்,
158,
160-ஆம் செய்யுள்களையும், சிறுபஞ்ச மூலம், 41-ஆம் செய்யுளையும் ஈண்டுக்
காண்க.
|