முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

726

276

திருவாய்மொழி - ஏழாம் பத்து

                         726 

        காண்டுங்கொ லோநெஞ்ச மே!கடிய வினையே முயலும்
        ஆண்திறல் மீளிமொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
        மீண்டுமவன் தம்பிக்கே விரிநீர் இலங்கை அருளி
        ஆண்டுதன் சோதி புக்க அமரர்அரி ஏற்றினையே?

   
பொ - ரை : கொடுந்தொழிலையே செய்கின்ற ஆண் தன்மையினையும் திறலையும் மிக்க வலியினையுமுடைய அரக்கனான இராவணனுடைய குலத்தைக் கொன்று, மீண்டும், அவனுடைய தம்பியாகிய விபீஷணனுக்கே கடல் சூழ்ந்த இலங்கையைக் கொடுத்து, திரு அயோத்தியில் வீற்றிருந்து பதினோராயிரம் ஆண்டுகள் அரசாட்சியைச் செலுத்தித் தன்னுடைச் சோதியை அடைந்த நித்தியசூரிகளுக்கு ஆண் சிங்கத்தைப் போன்றவனான சர்வேஸ்வரனை நெஞ்சம்! காண்போமோ?

    வி - கு :
‘குலத்தைத் தடிந்து தம்பிக்கு அருளி ஆண்டு புக்க அரியேறு’ என்க.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘இராவணன் முதலியோரை அழித்த சக்கரவர்த்தி திருமகனை, நெஞ்சே! காண வல்லோமோ?’ என்கிறார்.

    காண்டுங்கொலோ நெஞ்சமே - 2இழவாலே கட்டிக்கொண்டு கதறுகைக்குக் கூட்டான நீ, இப்பேற்றாலே இன்பமடைந்தவர் அனுபவிக்கும் அனுபவத்துக்கும் கூட்டாய் நாம் அவனைக் காணவல்லோமோ? கடிய வினையே முயலும் - 3தாயையும் தமப்பனையும் இரண்டு இடங்களிலே ஆக்குவாரைப் போலே அன்றோ, பெருமாளையும் பிராட்டியையும் இரண்டு இடங்களிலே ஆக்கிற்று? இதில்

_____________________________________________________________

1. ‘திருப்பாசுரம் முழுதினையும் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘நெஞ்சமே!’ என்று விளித்து, ‘காண்டுங்கொலோ?’ என்கிறவருடைய
  மனோபாவத்தை அருளிச்செய்கிறார், ‘இழவாலே’ என்று தொடங்கி. ‘அமரர்
  அரியேற்றினைக் காண்டுங்கொலோ?’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
  ‘இப்பேற்றாலே’ என்கிறார், ‘இப்பேற்றாலே’ என்றது ‘பகவானைக் கண்ட
  தன்மையாலே’ என்றபடி.

3. ‘கடிய வினை’ இன்னது என்கிறார், ‘தாயையும்’ என்று தொடங்கி.