ப
|
ஆறாந்திருவாய்மொழி -
பா. 9 |
279 |
பிறந்தவன்’ என்று அவன்
வர, இவரும் 1‘அவன் தம்பியே’ என்றாயிற்று அவனைக் கைக்கொண்டது. விரிநீர் இலங்கை
அருளி - கடல் சூழ்ந்த இலங்கையைக் கொடுத்தருளி.
மீண்டும் ஆண்டு -
இராவணனைக் கொன்ற பின்பு, பிரமன் முதலான தேவர்கள், ‘தேவரை அம்புக்கு இலக்கு ஆக்கி, நாங்கள்
எங்கள் காரியத்தைத் தலைக்கட்டிக்கொண்டோம்; இனி தன்னுடைச் சோதி ஏற எழுந்தருள அமையும்,’
என்ன, அவ்வளவிலே சிவன், ‘தேவர் அங்ஙன் செய்தருள ஒண்ணாது, திருவடி சூடுதற்குத் தடை உண்டாகையாலே
திருத்தாய்மாரும் இழிவுபட்டிருந்தார்கள்; நாடும் அடைய நொந்திருந்தது: ஸ்ரீபரதாழ்வானும் ஆர்த்தனாய்
இருந்தான்: ஆன பின்பு, 2‘வருந்தியிருக்கிற ஸ்ரீபரதாழ்வானையும் பெருமை பொருந்திய
ஸ்ரீகௌஸல்யையாரையும் சமாதானம் செய்து’ என்கிறபடியே’ ஸ்ரீபரதாழ்வான் தொடக்கமானவர் ‘இழவுகள்
எல்லாம் தீரும்படி மீண்டு எழுந்தருளி, திருமுடி சூடி, நாட்டை வாழ்விக்க வேணும்’ என்ன, அது திருவுள்ளத்துக்குப்
பொருந்தும் செயலாகையாலே பதினோராயிரம் ஆண்டு ஒரு படிப்பட இருந்து நாட்டினை வாழ்வித்தருளி.
தன் சோதி புக்க
- அம்புக்கு இலக்கு ஆக்குவார் இருந்த இடத்தை விட்டுத் தனக்கே சிறப்பாய் எல்லை அற்ற பேரொளிப்
பிழம்பு வடிவமாய் இருக்கிற பரமபதத்திலே போய்ப்புக்க. அமரர் அரி ஏற்றினையே- 3அம்பு
இட்டு எய்வார் இன்றிக்கே ஆநுகூல்யமே தன்மையாய்த் தொண்டிலேயே நிலை பெற்றவர்களான நித்தியசூரிகள்
நடுவே அவன் இருக்கும் இருப்பைக் காண வல்லோமே? 4பசுக்களின் கூட்டத்தின் நடுவே
ஓர் இடபம் செருக்கித் திரியுமாறு போலே, நித்தியசூரிகள் கொண்டாட, அவர்கள் நடுவே அதனாலே
_____________________________________________________________________
1. ‘பஞ்செனச் சிவக்கும்
மென்கால் தேவியைப் பிரித்த பாவி
வஞ்சனுக்கு இளைய என்னை
வருகஎன் றருள்செய் தானோ?’
என்றார் கம்பரும்.
2. ‘ஆஸ்வாஸ்ய பரதம்
தீநம் கௌஸல்யாம்ச யஸஸ்விநீம்’
என்பது, ஸ்ரீராமா. யுத். 122 :
4.
3. ‘அமரர் அரி ஏற்றினைக்
காண்டுங்கொலோ நெஞ்சமே’ என்கிறவருடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார், ‘அம்பு இட்டு’ என்று
தொடங்கி.
4. ‘அரி ஏறு’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘பசுக்களின்’ என்று தொடங்கி.
|