New Page 1
280 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
செருக்கி மேனாணித்திருக்கும்
இருப்பைச் சொல்லுகிறது. 1நித்தியசூரிகள் திரளிலே அந்த ஓலக்கத்தின் நடுவே
இருக்கும் இருப்பைக் காண்கை அன்றோ பிராப்பியமாகிறது?
(9)
727
ஏற்றருவை குந்தத்தை
அருளும்
நமக்கு
ஆயர்குலத்து
ஈற்றிளம்
பிள்ளை ஒன்றாய்ப்புக்கு
மாயங்களே
இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக்
கொன்று ஐவர்க்காய்க்
கொடுஞ்சேனை
தடிந்து
ஆற்றல்
மிக்கான் பெரிய பரஞ்சோதி
புக்க அரியே.
பொ - ரை :
‘பிறந்த ஓர் இளம்பிள்ளையாய் ஆயர் குலத்திலே புகுந்து ஆச்சரியமான காரியங்களையே செய்து,
யமனப் போன்ற தன்மையனான கம்ஸனைக் கொன்று, பாண்டவர்களுக்காக் கொடியசேனைகள் எல்லாவற்றையும்
கொன்று, ஆற்றலின் மிக்கானாய், பெரிய பரமபதத்திலே சென்று சேர்ந்த கிருஷ்ணனானவன், ஒருவர்
தம்முயற்சியால் ஏறுதற்கு அரிய பரமபதத்தை நமக்குக் கொடுப்பான்’ என்றவாறு.
வி - கு :
ஏற அரு என்பது, ‘ஏற்றாது’ என்றாயிற்று. ‘அரி நமக்கு வைகுந்தத்தை அருளும்,’ என்க. அரி - சிங்கம்;
உவம ஆகு பெயர். ‘ஈன்ற இளம்’ என்பது, ‘ஈற்றிளம்’ என்றாயிற்று. ‘ஆயர்குலத்திலே புக்கு இயற்றிக்
கொன்று தடிந்து ஆற்றிலின் மிக்கான்’ என்க. ஆற்றல் - பொறை. வலியுமாம்.
ஈடு :
பத்தாம் பாட்டு. 2பிராப்பியன் அவனே என்னும் இடத்தைச் சொல்லி, தன்னைப் பெறுவதற்குச்
சாதனம் தானே என்னும் இடத்தையும் சொல்லி, விரோதிகளை அழிப்பானே அவனே என்னும் இடத்தையும்
சொல்லி, இப்படி நம் பேற்றுக்குக் கண்ணழிவு
______________________________________________________________
1. ‘அமரர் அரி ஏற்றினைக்
காண்டுங்கொலோ’ என்று கூட்டிக் கருத்து
அருளிச்செய்கிறார், ‘நித்தியசூரிகள்’ என்று தொடங்கி.
2. மேல் திருப்பாசுரங்களில்
கூறியனவற்றை அநுவதித்துக் கொண்டு
இத்திருப்பாசுரத்திற்கு இயைபு அருளிச்செய்கிறார்,
‘பிராப்பிய’ என்று
தொடங்கி. உபாய கிருத்தியம், அநிஷ்டங்களை நீக்கி இஷ்டங்களை
அடைவித்தலாகையாலே, மேல் இரண்டு திருப்பாசுரங்களிலும்
அநிஷ்டங்கள் நீக்கினதை அருளிச்செய்து, இத்திருப்பாசுரத்திலே
இஷ்டத்தை அடைவித்தலை அருளிச்செய்கிறார் என்றபடி. ‘வைகுந்தத்தை
அருளும்’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றி, ‘அவன் தன்னை’
என்று தொடங்கி அருளிச்செய்கிறார். ‘வைகுந்தத்தை அருளும்’
என்னாநிற்க, ‘தன்னை நமக்குத் தரும்’ என்றது, பரமபதத்தே சென்றால்
அனுபவிக்கப்படுகின்றவன் அவனாகையாலே
என்க.
|