New Page 1
|
282 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
தொடங்குதல். இவன் இப்படிச்
செய்யப் புக்கவாறே அவற்றைக் கேட்டுப் பொறுக்கமாட்டாமல் கூற்றுவனைப் போலே கிளர்ந்தான்
ஆயிற்றுக் கம்ஸன். கூற்று இயல் கஞ்சனைக் கொன்று-மஞ்சத்திலே இருந்த கம்ஸனை முகம் கீழ்ப்பட
விழ விட்டுக் கொன்று போகட்டானாயிற்று. இயல்பு-தன்மை. 1‘அந்தக் கண்ணபிரான்,
கிரீடம் கீழே விழும்படி மயிரைப் பிடித்து இழுத்துப் பூமியிலே தள்ளினார்’ என்றதற்குக் கருத்து
என்னையோ?’ எனின், ‘இராஜத் துரோகிகளைக் கொல்லும்போது இராஜ சிந்நங்களை வாங்கிக்
கொல்லுவாரைப் போலேகாண்’ என்று அம்மாள் பணிப்பர். 2தான் கொடுத்த
தரம் ஆகையாலே மற்று ஒருவர்க்குத் தோற்றத்துக்குக் காரணமாக வேண்டும் அன்றோ? ஆக, தன்னைத்தான்
அறிவதற்கு முன்பு, கம்ஸன் வரவிட்டவர்களையும் அவனையும் தப்புகைக்குப் பணி போந்தது; பருவம் நிரம்பித்
தன்னைத்தான் அறிந்த பின்பு, பாண்டவர்கள் காரியம் செய்து இத்தனை என்கிறார்.
ஐவர்க்காய்க்
கொடுஞ்சேனை தடிந்து - பாண்டவர்களைச் சீறினவர்கள் அடைய ‘சாரதி, சாரதி’ என்று வாய்
பாறிக்கொண்டு வர, அவர்களை அடையத் தேர்காலாலே உழக்கிப் போகாட்டானாயிற்று. ஆற்றல்
மிக்கான் - 3பகைவர்கள்யும் வேரோடே வாங்கிப் போகட்டு, தருமபுத்திரன் தலையிலே
முடியையும் வைத்து, இவள் குலைந்த சூழலையும் முடிப்பித்த இடத்திலும், 4‘நிலைபெறாத
மனத்தையுடையவனாய் இருக்கிறேன்’ என்றே அன்றே எழுந்தருளினான்?
____________________________________________________________________
1. ‘கொன்று’ என்பதற்குப்
பிரமாணம் முன்னாகப் பொருள் அருளிச்செய்கிறார்,
‘அந்தக் கண்ணபிரான்’ என்று தொடங்கி.
‘கேஸேஷூ ஆக்ருஷ்ய
விகளத் கிரீடம் அவநீதலே
ஸ கம்ஸம் பாதயாமாஸ
தஸ்ய உபரி பபாத ச’
என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20
: 84.
2. ‘முடியை வாங்கிக்
கொல்லுகிறது என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘தான் கொடுத்த’ என்று தொடங்கி.
‘இறைவன் கொடுத்த சிந்நங்கள் இருக்கில்
அவனாலும் கொல்லப் போகாது’ என்கை. தேற்றத்துக்கு-நம்புவதற்கு.
3. ‘ஆற்றல்’ என்பதற்குப்
‘பொறுமை’ என்று பொருள் கொண்டு பாவம்
அருளிச்செய்கிறார், ‘பகைவர்களையும்’ என்று தொடங்கி.
4. ‘நாதிஸ்வஸ்த
மநா:’ என்பது, பாரதம், உத்யோக.
|