ஆற
ஆறாந்திருவாய்மொழி -
பா. 11 |
283 |
ஆற்றல் என்று பொறையாய்,
‘பொறை மிக்கவன்’ என்னுதல். அன்றிக்கே, வலியாய், ‘வலி மிக்கவன்’ என்னுதல். இவற்றை
அடைய அழியச் செய்கைக்கு அடியாற வலியைச் சொன்னபடி. பெரிய பரஞ்சோதி புக்க அரியே -
2கம்ஸனும் துரியோதனனும் இல்லாத இடத்தில் பரமபதத்திலே போய்ப் புக்க பின்பும், ‘நித்திய
சூரிகள் நடுவே இருந்தோம் அன்றோ?’ என்று பாராதே, கம்ஸன் துரியோதனன், கர்ணன் என்று, ஆசிலே
வைத்த கையுந்தானுமாய்ப் பகைவர்கள் மேலே சீறன சீற்றத்தின் வாசனை அங்கேயும் தொடர்ந்தபடி.
(10)
728
புக்க அரிஉருவாய்
அவுணன்உடல் கீண்டுஉகந்த
சக்கரச் செல்வன்தன்னைக்
குருகூர்ச்சட கோபன்சொன்ன
மிக்கஒர் ஆயிரத்துள்
இவைபத்தும்வல் லார்அவரைத்
தொக்குப்பல் லாண்டிசைத்துக்
கவரிசெய்வர் ஏழையரே.
பொ-ரை :
அந்த நரசிங்கத்தின் உருவமாகிப் புக்கு அவுணனாகிய இரணியனுடைய சரீரத்தைப் பிளந்து மகிழ்ந்த
சக்கரத்தையுடைய சர்வேசுவரனை, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த மேம்பட்ட
ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இத்திருப்பாசுரங்கள் பத்தையும் கற்று வல்லவர்களாகிய அவர்களைப்
பெண்கள் சூழ்ந்துகொண்டு பல்லாண்டு பாடிச் சாமரை வீசுவார்கள்.
ஈடு :
முடிவில், 3‘இத்திருவாய்மொழி கற்றாரை மதிமுக மடந்தையர் விரும்பித் திருப்பல்லாண்டு
பாடிச் சிறப்பிப்பர்கள்,’ என்கிறார்.
______________________________________________________________
1. வலி என்ற பொருளில்
பாவம் அருளிச்செய்கிறார், ‘இவற்றையடைய’ என்று
தொடங்கி.
2. ‘அரி’ என்பதற்குப்
பகைவன் என்றும், ‘திருவாழியையுடையவன்’ என்றும்
பொருள் கொண்டு அருளிச்செய்கிறார,் ‘கம்ஸனும்’
என்று தொடங்கி. அரி
-சக்கரத்தையுடையவன் என்ற பொருளில், ‘அரம்அஸ்ய அஸ்திஇதி அரீ’
என்று பதத்தைப் பிரித்துக்கொள்வது. ஆக-ஆயுதப்பிடி.
3.
‘அவரைத் தொக்குப் பல்லாண்டு இசைத்துக் கவரி செய்வர் ஏழையரே’
என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
|