ம
288 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
மானஸ அனுபவமாய் இருக்கையும்,
அனுபவித்த குணங்கள் ஒழிய மற்றைய குணங்களிலே விருப்பம் செலுத்துதலும். 1அதுதன்னில்
கிரமப் பிராப்தி பற்றாமையும், அதுதான் மேல் நின்ற நிலையை மறக்கும்படி செய்கையும் ஆகிற
இவையே அன்றோ? அவற்றைக் காட்டிலும், உருவு வெளிப்பாடாகச் சொல்லுகிற இதில் ஏறின அமிசம்
என்?’ என்னில், ‘முன்பு பிறந்த தெளிவும் கிடக்கச் செய்தே மேலே விருப்பத்தை உண்டாக்குமது
அன்றோ உருவு வெளிப்பாடாகிறது? 2மற்றைய இடத்தில், முன் பிறந்த தெளிவை அழித்தே
அன்றோ மேலில் விருப்பம் பிறப்பது? ‘எங்ஙனேயோ?’ என்ற திருவாய்மொழியிலும் 3பெரும்பாலும்
இதுவே அன்றோ ஓடுகிறது? அதில் இதற்கு வாசி என்?’ என்னில், அதில் பிரீதியும் பிரீநி இன்மையும்
சமமாக இருக்கும்; இங்குப் பிரீதி இன்மை மிக்கிருக்கும். 4திருக்கண்களில் அழகை
‘இணைக்கூற்றங்கொலோ!’ என்னும்படியாயிற்று இங்குத் தீங்கு செய்வதில் உறைப்பு இருக்கும்படி.
729
ஏழையர் ஆவிஉண்ணும்
இணைக்கூற்றங்கொ
லோஅறியேன்
ஆழியங் கண்ணபிரான்
திருக்கண்கள்கொ
லோஅறியேன்
சூழவும் தாமரைநாண்
மலர்போல்வந்து
தோன்றுங்கண்டீர்
தோழியர்
காள்!அன்னைமீர்!
என்செய்கேன்துய
ராட்டியேனே.
பொ-ரை :
தோழிமீர்காள்! அன்னைமீர்காள்! கடல் போன்ற நிறத்தையுடைய அழகிய கண்ணபிரானுடைய திருக்கண்கள்,
பெண்களினுடைய உயிர்களை உண்ணும்படியான இரண்டு கூற்றங்கள் தாமோ? அறியேன்! அல்லது, திருக்கண்கள்தாமோ?
அறியேன்! அத்
_____________________________________________________________
1. அது தன்னில்-வேறு குணங்களை
அனுபவிக்குமிடத்தில்
2. ‘மற்றைய இடத்தில்’
என்றது, உருவு வெளிப்பாடு அல்லாத இடத்தில்
என்றபடி.
3. ‘பெரும்பாலும்’ என்பது,
அத்திருவாய்மொழியில், சில திருப்பாசுரங்களில்
உருவு வெளிப்பாடு உண்டு என்றபடி.
4.
‘மிக்கிருக்கும்’ என்பதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்,
‘திருக்கண்களில்’ என்று தொடங்கி.
|