முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அற

ஏழாந்திருவாய்மொழி - பா. 1

291

அறியக் காரணம் இல்லை. 1‘உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக்கண்’ என்றே அன்றோ கேட்டிருப்பது? இக்கடாக்ஷமே தாரகமாக அன்றோ உலகம் அடைய ஜீவிப்பது? நாம் கேட்டிருந்தபடி அன்றிக்கே இராநின்றது, இப்போது காண்கிறபடி. ‘ஆனால், தப்பினாலோ?’ என்னில்,

    சூழவும் தாமரை நாண்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் - 2மூலபலத்தின் அன்று பார்த்த இடமெல்லாம் பெருமாளே ஆனாற் போலே ஆயிற்று; 3இராம பாணத்துக்கு இராக்கதர்கள் தப்பலாம் அன்றாயிற்று, இக்கண்களின் அழகின்கீழ் அபலைகளாய் இருப்பார்க்குத் தப்பலாவது? 4‘புண்டரீக நெடுந்தடங்கள் போலப் பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும்’ என்னக் கடவது அன்றோ? 5பாம்பைக் கண்ட அச்சம் போலே இருக்கை. 6இறாய்க்க நினைத்த இடம் எங்கும் தானேயாய் இராநின்றது. 7‘இப்போது ‘தாமரை நாண்மலர் போல்’ என்பான் என்?’ என்னில், 8‘பூஜிக்கத்தக்க

____________________________________________________________________

1. ‘உயிர்க்கெல்லாம்’ என்பது, பெரிய திருமொழி, 7. 1 : 9. இத்திருப்பாசுரத்துக்குக்
  கருத்து அருளிச்செய்கிறார், ‘இக்கடாக்ஷமே’ என்று தொடங்கி.

2. ‘சூழவும்’ என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘மூல பலத்தின்’ என்று
  தொடங்கி. கம்பராமாயணம் யுத்தகாண்டம் மூலபல வதைப்படலம் 115 முதல்
  119 முடியவுள்ள செய்யுள்களைக் காண்க.

3. ‘தாமரை நாண்மலர்’ என்றதற்கு பாவம் ‘இராமாயணத்துக்கு’ என்று தொடங்கும்
  வாக்கியம்.

4. திருக்கண்கள் எங்கும் பரந்தீருப்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘புண்டரீகம்’
  என்று தொடங்கி. இது, திருவிருத்தம், 39.

5. பார்த்த இடமெல்லாம் திருக்கண்கள் பாதகத்தைத் தருகின்றன என்னுமதற்கு,
  வேறும் ஒரு திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘பாம்பைக் கண்ட அச்சம்’ என்று தொடங்கி.

6. ‘சூழவும்’ என்று தொடங்கும் தொடருக்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘இறாய்க்க’
  என்று தொடங்கி.

7. பிரிந்திருக்கும் வேளையில் ‘நாண்மலர்’ என்னுதல் கூடாது என்று சங்கிக்கிறார்,
  ‘இப்போது’ என்று தொடங்கி.

8. ‘என்? ‘தாமரை நாண்மலர்போல்’ என்ன ஒண்ணாதோ?’ என்ன, பிரிந்துள்ள
  காலத்திலே அவன் உறாவி இருக்கையாலே அப்படிச் சொல்ல ஒண்ணாது என்று
  திருவுள்ளம்பற்றி, சொல்ல ஒண்ணாமைக்குப் பிரமாணங்கள் காட்டுகிறார்,
  ‘பூஜிக்கத்தக்க’ என்று தொடங்கியும், ‘நைவ தம்ஸாந்’ என்று தொடங்கியும்.