வந
ஏழாந்திருவாய்மொழி -
பா. 2 |
293 |
வந்து தோன்றும்
- 1பிரித்தியக்ஷத்திலே அத்தலையாலே வரவு ஆனாற்போலே உருவு வெளிப்பாட்டிலும் அத்தலையாலே
வந்து தோன்ற ஆயிற்றுத் தான் அறிகிறது. கண்டீர் - உங்களுக்கு இது தோற்றுகிறது இல்லையோ? தோழியர்காள்
அன்னைமீர் - 2சிலர்க்குச் சொல்லிச் சிலர்க்கு மறைக்கும்படியன்றே இவள் நிலை?
என்றது, 3‘தோழிமார்க்குச் சொன்ன இதனைத் தாய்மார்க்குச் சொல்லுவோம் அல்லோம்,’
என்று மறைக்கும் அளவு அன்று ஆயிற்று, இவளுக்குப் பிறந்த நிலை விசேடம்,’ என்றபடி. என்செய்கேன்
- 4இதனைத் தப்பப் பார்ப்பதோ, அனுபவிக்கப் பார்ப்பதோ? எதனைச் செய்கேன்?
துயராட்டியேனே - 5‘இறைவனுடைய ஆனந்தத்தை அறிந்தவன் எப்பொருளினின்றும் அஞ்சான்,’
என்று இருக்க வேண்டி இருக்க, அங்ஙன் அன்றிக்கே, ‘அவசியம் அனுபவிக்கத் தக்கது’ என்கறிபடியே,
6பழைய கிலேசமே அனுபவிக்கும்படி ஆயிற்றே.
(1)
730
ஆட்டியும் தூற்றியும்
நின்றுஅன்னை
மீர்!என்னை
நீர்நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்
தின்வல்லி
யோகொழுந்
தோஅறியேன்
ஈட்டிய வெண்ணெய்உண்
டான்திரு
மூக்குஎன தாவியுள்ளே
மாட்டிய வல்விளக்
கின்சுட
ராய்நிற்கும்
வாலியதே.
_________________________________________________
1. ‘வந்து தோன்றும்’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘பிர்த்யக்ஷத்தில்’
என்று தொடங்கி.
2. இருவரையும் விளிப்பதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘சிலர்க்கு’ என்று
தொடங்கி.
3. மேல் வாக்கியத்தை விவரணம்
செய்கிறார், ‘தோழிமார்க்கு’ என்று தொடங்கி.
4. ‘சூழவும்’ என்கையாலே,
‘தப்பப்போகாது’ என்றபடி.
5. ‘ஆநந்தம் ப்ரஹ்மணோ
வித்வாந் நபிபேதி குதஸ்சந’
என்பது, தைத்திரீ.
‘இடராக வந்தென்னைப்
புன்சிறு தெய்வங்கள் என்செயுமான்
இடராக வன்பிணி மாநாக மென்செயும்
யான்வெருவி
இடராக வன்னி புனல்இடி
கோள்மற்றும் என்செயும்வில்
இடராக வன்அரங் கன்திருத்
தாள்என் இதயத்ததே.’
என்ற திருவரங்கத்தந்தாதிச்செய்யுள்,
மேற்சுலோகப்பொருளோடு ஒப்பு நோக்கல்
தகும்.
6. ‘பழைய
கிலேசமே’ என்றது, ‘பிரிவின் கிலேசமே’ என்றபடி.
|