முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

294

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    பொ - ரை : தாய்மார்களே1 நீங்கள், என்னை வருத்தியும் பழி மொழிகளைக் கூறியும் நின்று நலிவதனால் பயன் யாது? திரட்டிய வெண்ணெய் உண்டவனான கிருஷ்ணனது அழகிய மூக்கானது, பக்கத்தில் உயர்ந்து விளங்குகின்ற கறபகத்தின் கொடியோ? அல்லது, கொழுந்தோ? அறியேன்; அது, என்னுடைய உயிருக்குள்ளே ஏற்றிய வலிய விளக்கினது சுடராய் நிற்கும் பெருமையையுடையது.

    வி - கு : ‘திருமூக்கு வல்லியோ, கொழுந்தோ அறியேன்; திருமூக்குச் சுடராய் நிற்கும் வாலியது,’ என்க.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘இரண்டுக்கும் நடுவே நாம் இருக்க, இவை முற்படுகையாவது என்? அத்தனையோ நம் மூக்கு வலி?’ என்று திருமூக்கில் அழகு நலிகிறபடியைச் சொல்லுகிறது.

    ஆட்டியும் தூற்றியும் - ஆட்டுகையாவது, தாம் தாம் பழி சொல்லி அலைக்கை. தூற்றுகையாவது, பிறரும் அறியப் பழி சொல்லுகை நின்று - 2‘அச்சம் உறுத்தி மீட்கலாமோ?ய என்று ஒருகால் அலைக்கை இயல்பே அன்றோ? அங்ஙன் அன்றிக்கே, முன்பு செய்ததற்கு ஒரு பிரயோஜனம் காணாதிருக்கச் செய்தேயும் விடாதே நின்று. அன்னைமீர் என்னை நீர் நலிந்து என் - 3ஹிதத்திலே நடக்கும் தமப்பனைப் போலே, என் பிரியத்திலே நடக்கும் நீங்கள் என்னை நலிகிறது என்? 4என் உகப்பே பேறாக நினைத்திருக்கக்கூடிய நீங்கள் நலிகிறது என்? 5அந்த உருவு வெளிப்பாட்டைத் தடை

____________________________________________________________________

1. ‘திருமூக்கு’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி ரசோக்தியாக, பாவம்
  அருளிச்செய்கிறார், ‘இரண்டுக்கும்’ என்று தொடங்கி. மூக்கு வலி-மூக்கு என்ற
  பெயரையுடைய நம்முடைய வலி. ‘மூச்சு’ என்பது ரசோக்தி.

2. ‘நின்று’ என்பதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘அச்சம் உறுத்தி’ என்று தொடங்கி.
  அதனை விவரணம் செய்கிறார், ‘அங்ஙன் அன்றிக்கே’ என்று தொடங்கி.

3. இத்துணைநாளும் தோழிமாரைப் பிரியத்தை நோக்குகின்றவர்களாகவும், தாய்மாரை
  ஹிதத்தை நோக்குகின்றவர்களாகவும் சொல்லிக் கொடு போந்தாள்; இப்போது
  தாய்மாரைப் ‘பிரியத்தை நோக்குகின்றவர்கள்’ என்கிறாள், ‘ஹிதத்திலே’ என்று
  தொடங்கி.

4. ‘நீர்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘என் உகப்பே’ என்று தொடங்கி.

5. ‘என்னை நலிவதனால் உங்களுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை,’ என்று ‘என்’
  என்பதற்கு வேறும் ஒரு பாவம் அருளிச்செய்கிறார், ‘அந்த உருவு
  வெளிப்பாட்டை’ என்று தொடங்கி.