New Page 1
ஏழாந்திருவாய்மொழி -
பா. 4 |
299 |
தொண்டை-கொவ்வை.
1தன்னில்தான் உண்டான பகை பார்த்திருக்கிறது இல்லையாயிற்று, இவளை நலிகிறவிடத்தில்.
2 ‘இரண்டுக்கும் சேர வன்னியம் இல்லை அன்றோ? 3அவை நலிந்துகொடு தோற்றா
நின்றதாகில் தப்பப் பார்த்தாலோ?’ என்ன, ‘வாய்வலி தப்பலாயோ இருக்கிறது?’ என்கிறாள் மேல்:
ஏலும் திசையுள் எல்லாம்4-நானும் இவை நலியாத இடம் தேடித் தப்ப விரகு பாராநின்றேன்:
அவ்வவ்விடங்களிலே வந்து தோன்றாநின்றது. என்றது, ‘பாரத்த இடமெல்லாம் தானேயாய் இராநின்றது,’
என்றபடி. ‘தோன்றுகிறதற்குக் கருத்து என்?’ என்னில், என் இன் உயிர்க்கே-என்னுடைய நற்சீவனை
முடிக்கைக்காக.
(3)
732
இன்னுயிர்க்கு
ஏழையர் மேல்வளை
யும்இணை
நீலவிற்கொல்
மன்னிய சீர்மத
னன்கருப்
புச்சிலை
கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதைகண்
ணப்பெரு
மான்புரு
வம்மவையே
என்னுயிர் மேலன
வாய்அடு
கின்றன
என்றும்நின்றே.
பொ - ரை :
மன்மதனுக்கு உயிர் போன்ற தந்தையாகிய கண்ணபிரானுடைய புருவங்களானவை, இனிய உயிர்களைக்
கவர்வதற்காகப் பெண்கள்மேல் வளைகின்ற நீல நிறம் பொருந்திய விற்கள்தாமோ? அன்றிக்கே,
நிலைபெற்ற கீர்த்தியையுடைய மன்மதனுடைய கரும்பு வில்தாமோ என்னுடைய உயிர் மேலனவாய் எப்பொழுதும்
நிலை பெற்று வருத்துகின்றன?
_____________________________________________________________
1. ‘திருமேனியில்
கருமையும் பரபாகமாய் மாறுபாடில்லாதே, கூடி
நலியக்கூடுமோ?’ என்ன, ‘தன்னில்தான்’ என்று தொடங்கி
அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
2. ‘நலிகிற இடத்தில்
இரண்டும் பிரதானமாய் இருக்குமோ?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘இரண்டுக்கும்’ என்று
தொடங்கி. ‘ஒன்றே
பிரதானம்’ என்றபடி. என்றது, ‘திருமுகத்தின் அழகினைச் சொல்லுகிற
பிரகரணம்
ஆகையாலே, திரு அதரமே பிரதானமாய், திருமேனி அழகு
கூட்டுப்படையாம்’ என்றபடி. சேரவன்னியம் இல்லை-ஒத்த
பகை இல்லை.
3. மேலுக்கு அவதாரிகை
அருளிச்செய்கிறார், ‘அவை’ என்று தொடங்கி.
4.
‘எல்லாம்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார் ‘நானும்’ என்று தொடங்கி.
அதனை விவரணம் செய்கிறார்,
‘பார்த்த பார்த்த’ என்று தொடங்கி.
|