முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

முதல் திருவாய்மொழி - முன்னுரை

3

தாண்டுகிறார்கள்,’ என்கிறபடியே, கடுகப் பலித்துக்கொடு நிற்கக் கண்டிலர். 1இனி, ‘நம்மைக் கைவிடப் பார்த்தான் ஆகாதே’ என்று இன்னாதாகிறார். 2‘சர்வேஸ்வரன் திருவருள் செய்வதற்கு வேண்டுவன, சம்சாரத்தினுடைய தண்ணிமை நெஞ்சிலே படுதல் சர்வேஸ்வரனுடைய வைலக்ஷணயத்தை நினைத்தல், சரணாகதி செய்தல் என்னும் இவற்றிற்கு மேற்பட இல்லை அன்றோ?’ என்று சம்சாரத்தின் சுபாவத்தை நினைத்துப் போக்கடி அற்று அவ்வடியைப் பற்றிச் சரணம் புக்கார்; புக்க இடத்திலும் தாம் விரும்பிய காரியத்தைச் செய்யாமையாலே, சரணம் புக்கார் மேலே வேல்காரரை ஏவித் துன்புறுத்தும் அருளற்றவரைப்போலேயாக அவனை நினைத்து அஞ்சினவராய், இவ்வளவிலும் பலிக்கக் காணாமையாலே, ‘வைப்பனாக வைத்த பிரஹ்மாஸ்திரம் வாய்மடிந்ததுகாண்! என்று கூப்பிடுகிறார்.

    3
‘இனித்தான், ‘தள்ளுகிறேன்’ என்பதும். ‘கொடுக்கிறேன்’ என்பதும். இரண்டேயன்றோ? அவற்றுள், ‘தள்ளுகிறேன்’ என்னுமளவிலேயன்றோ நாம்’ என்றிருந்தார். 4‘அது என்? இவர்க்குக் ‘கொடுக்கிறேன்’ என்ற புத்தி யோகத்தைச் செய்து கொடுத்தானே?’ என்னில், ‘அதுவும் நோவுபடுகைக்கு உடலாகத் தந்தான்’ என்றிருக்கிறார். 5தம்முடைய சத்திகொண்டு பெற இருந்தார் அல்லர்; அவனுக்குச் சத்தி இல்லாமல் இழக்கிறார் அல்லர்; பேற்றுக்கு வேண்டுவது முன்பே செய்து நின்றார்; ‘ஆன பின்பு,

______________________________________________________________________

1. மேல் ‘இனிக் கைவிடப் பார்த்தானாகாதே’ என்றதனை விவரணம் செய்கிறார், ‘இனி,
  நம்மை’ என்று தொடங்கி.

2. இன்னாதாகிற பிரகாரத்தைக் காட்டுகிறார், ‘சர்வேஸ்வரன்’ என்றது முதல் ‘கூப்பிடுகிறார்’
  என்றது முடிய.

3. ‘விரைவில் பலியாவிட்டால் ‘முறையாகப் பலிக்கிறது’ என்றிராமல், ‘பலியாது’ என்று
  பட்டுக் கூப்பிடுகைக்குக் காரணம் யாது?’ என்ன, ‘இனித்தான்’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘க்ஷிபாமி’ என்பது, ஸ்ரீகீதை, 16 : 19. ‘ததாமி’
  என்பது, ஸ்ரீ கீதை, 10 : 10.

4. ‘தள்ளுகிறேன் என்றதற்கு, இலக்கானோம்’ என்று அதிசங்கை பண்ணுவான் என்?’
  ‘கொடுக்கிறேன்’ என்ற புத்தி யோகற்தைப் பண்ணிக் கொடுத்தானே என்கிற
  சங்கையை அநுவதித்து, அது இப்போது காரியகரமாகாமையாலே அதுவும் வேறு
  ஒன்றற்காம் என்று வெறுக்கிறார் என்று பரிஹரிக்கிறார், ‘அது என்? இவர்க்கு’ என்று
  தொடங்கி.

5. மேலே ‘விளம்பத்திற்குக் காரணம் இல்லாத’ என்று தொடங்கிய வாக்கியத்தை
  விவரணம் செய்கிறார், '
தம்முடைய’ என்று தொடங்கி. ‘முன்பே செய்து நின்றார்’
  என்றது, பிரபத்தி செய்து நின்றமையைக் குறித்தபடி.