அகப
30 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
அகப்பட ஒரு விஷயத்தின்
காற்கடையிலே கிடந்தான் அன்றோ? பெருமாளுக்குப் பரிவரன மஹாராஜர், பெருமாளை மின்னுக்கும்
இடிக்கும் இரையாக நான்கு மாதங்கள் விட்டுவைத்து இந்திரியங்களுக்குப் பரவசப்பட்டவராய் அல்வழி
என்று நினைத்திலர் அன்றோ? இவற்றைத் தெரிவித்தபடி. 1அன்றிக்கே, ‘விண்ணுளாராய்ப்
பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும்’ என்னுதல். 2ஒக்கப் பிறந்து
இளையபெருமாளைப் போலே அடிமை செய்து திரிவார் உளர் அன்றோ? 3திருவடியையும் அகப்பட
‘எனக்கு’ என்னப் பண்ணிற்றே அன்றோ? என்றது, சுமுகன் என்கிற பாம்பு திருவடிகளிலே சென்று
கிட்ட, பெரிய திருவடி ஓடிச்சென்று, ‘எனக்கு உணவாக இருக்கிற இதனைக் கைக்கொண்டு நோக்குவதே!’
என்று வெறுத்து, ‘தேவரீரையும் நாய்ச்சிமாரையும் நெடுங்காலம் தாங்கிக் கொண்டு திரிந்தேன்:
நான் ஏன் பெற்றேன்?’ என்றதனைத் தெரிவித்தபடி. 4இதுவன்றோ சம்சாரத்தின் தன்மை
இருக்கிறபடி? 5அவன் தான் அவதரித்துச் சோகிப்பது மோகிப்பதானாற்போலே ஆயிற்று
இவர்களும்.
_____________________________________________________________________
1.
இரண்டாவது பொருளை அருளிச்செய்கிறார், அன்றிக்கே’ என்று
தொடங்கி.
2. ‘நித்திய சூரிகள் இவ்வுலகத்தில்
அடிமை செய்வார்களோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘ஒக்கப் பிறந்து’
என்று தொடங்கி.
3. ‘அவதார தசையில் இந்திரியங்களால்
இடர்ப்பட்ட இடம் உண்டோ?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘திருவடியையும்’ என்று தொடங்கி.
அதனை
விவரணம் செய்கிறார், ‘சுமுகன்’ என்று தொடங்கி. இச்சரிதப்பகுதியை.
‘நஞ்சு சோர்வதோர் வெஞ்சின
அரவம்
வெருவி வந்துநின்
சரணெனச் சரணா
நெஞ்சில் கொண்டுநின் அஞ்சிறைப்
பறவைக்கு
அடைக்கலம் கொடுத்து
அருள் செய்த தறிந்தும்’
என்னும் திருப்பாச்சுரத்தால் உணர்தல்
தகும். பெரிய திருமொழி, 5. 8:4.
4. ‘சம்சார சம்பந்தம்
சிறிதும் இல்லாதவரை இந்திரியங்கள் பாதிக்குமோ?’ என்ன,
‘இதுவன்றோ’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
5. ‘கர்மங்கட்கு
வசப்படாதவர்களுக்கும் இது பொருந்துமோ?’ என்ன, ‘அவன்தான்’
என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். என்றது, ‘பாவனை’ என்றபடி.
|