முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

என

ஏழாந்திருவாய்மொழி - பா. 5

303

என்மேலேயாய் இராநின்றது. 1எங்கும் பக்கம் நோக்கு அறியாமல் அன்றோ இருப்பது? அடுகின்றன - கொல்லாநின்றன. என்றும் நின்றே-பாதகமாக நிற்கச்செய்தேயும் அழிந்து போகக் கூடியனவாய் இருப்பன சில பொருள்கள் உள அன்றோ? இவை அங்ஙன் அன்றிக்கே என்றும் ஒக்க நின்று நலியாநின்றன. என்னை நலிகைக்காக நித்தியமாய் இருக்கும் தன்மையை ஏறிட்டுக்கொண்டன; 2‘நித்தியமாய் இருப்பதும் நித்தியமாய் இருக்கும் வடிவை ஏறிட்டுக் கொண்டதும்’ என்கிறதுதானே அன்றோ நலிகிறது?  

(4)

                733

        என்றுநின் றேதிக ழும்செய்ய
             ஈன்சுடர் வெண்மின்னுக்கொல்?
        அன்றிஎன் ஆவி அடும்அணி
             முத்தங்கொ லோ? அறியேன்
        குன்றம் எடுத்த பிரான்முறு
             வல்எனது ஆவிஅடும்
        ஒன்றும் அறிகின்றி லேன்அன்னை
             மீர்!எனக்கு உய்விடமே.


   
பொ - ரை : ‘கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்த உபகாரகனான ஸ்ரீகிருஷ்ணனுடைய முறுவலானது, என்றும் நிலைபெற்று விளங்குகின்ற செம்மையை வீசுகின்ற சுடரையுடைய வெண்மையான மின்னல்தானோ? அன்றி, என் உயிரை வருத்துகின்ற அழகிய முத்துகள்தாமோ? அறியேன் எனது ஆவியை வருத்துகின்றது, அன்னைமீர்! நான் பிழைக்கும் இடத்தை ஒரு சிறிதும் அறிகின்றிலேன்,’ என்றபடி.

    வி - கு :
‘முறுவல், மின்னுக்கொல்’ முத்தங்கொல்’ அறியேன்; உய்விடம் ஒன்றும் அறிகின்றிலேன்,’ என்க.

______________________________________________________________

1. ‘இந்த நோக்குத் தம்மேலேயோ?’ என்ன, ‘ஆம்’ என்று அதற்குப்
  பிரமாணம் காட்டுகிறார், ‘எங்கும்’ என்று தொடங்கி. இது.
  திருவாய். 2. 6 : 2.

2. ‘நித்தியம்’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘நித்தியமாய்’ என்று
  தொடங்கி. ‘நித்யம் நித்யாக்ருதிதரம்’ என்பது, பிரமாணம்.

3. ‘முறுவல் எனது ஆவி அடும்’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார், வாய்க்கரையிலே-‘அதரத்திலே’ என்பது பொருள்.
  ‘தொடக்கத்திலே’ என்பது வேறும் ஒரு பொருள்.