முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

என

304

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக்கொல்-என்றும் ஒக்க மாறாதே விளங்காநிற்பதாய், செய்ய சுடரை ஈனாநின்றுள்ள வெண்மின்னோ? 1திருப்பவளத்திற் சிவப்பும் திருமுத்து நிரையில் வெளுப்புமாய்க் கலந்து தோற்றுகிற போது, திருப்பவளத்தின் சிவப்பை அது ஈன்றாற்போலே ஆயிற்று இருக்கிறது. 2இதனை ‘அசிராம்ஸூ;’ என்பர்களே. பிறரை நலிய என்றவாறே பல் இறுகிக்கொண்டு வருகிறதுகாணும். அன்றி என் ஆவி அடும் அணி முத்தங்கொலோ-அன்றிக்கே, என் உயிரை முடிக்கிற திருமுத்து நிரைதானேயோ? 3யானை அணி செய்து வந்து தோன்றினாற்போலே இருத்தலின், ‘அணிமுத்தம்’ என்கிற்று. அன்றிக்கே, ‘அழகிய முத்தம்’ என்னுதல் - 4மேலே ‘வெண்மின்னுக்கொல்’ என்ற இடத்தே திரு அதரத்தோடே கூடின சேர்க்கையாலே நலிந்தபடி சொல்லிற்று; இங்குத் தனியே நலிகிறபடி சொல்லுகிறது.

    குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்-மலையை எடுத்து மழையிலே நோவுபடாதபடி பெண்களை நோக்கின உபகாரகனுடைய முறுவலானது, என் ஒருத்திக்கும் பாதகமாகாநின்றது. 5‘பசுக்களை அன்றோ தான் நோக்கிற்று?’ என்னில், 6‘மிக்க வருத்தம் அடைந்த பசுக்களின் கோபிமார்களின் கூட்டத்தைப்

_____________________________________________________________________

1. ‘வெண்மின் செய்ய சுடரை ஈனக் கூடுமோ?’ என்ன, ‘திருப்பவளத்தில்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

2. ‘மின்னல் என்றும் நிற்கக் கூடுமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘இதனை’ என்று தொடங்கி. என்றது, ‘நலிகைக்காக நித்தியத்துவத்தை
  ஏறிட்டுக்கொண்டது’ என்றபடி. ‘இதனை’ என்றது, மின்னலை. அசிராம்ஸூ:-
  தோன்றி மறையும் ஒளி; என்றது, மின்னல்.

      ‘பல் இறுகிக்கொண்டு’ என்றது, சிலேடை: ‘பல்லானது நிலையுள்ள
  தன்மையை ஏறிட்டுக்கொண்டு’ என்பதும், ‘பல்லைக் கடித்துக்கொண்டு’
  என்பதும் பொருள்.

3. ‘யானை அணி செய்து வந்து தோன்றினாற்போலே’ என்றது, தீமை செய்தலின்
  உறைப்பைக் காட்டினபடி. அணி செய்து-நிரை செய்து.

4. ‘செய்ய ஈன் சுடர் வெண்மின்’ என்று திருஷ்டாந்தத்திலே சொன்னாற்போலே,
  தார்ஷ்டாந்திகத்திலும் திருவதரத்தின் காந்தியோடு கூடிய முத்தம் என்ன
  வேண்டாவோ?’ என்ன. அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பசுக்களை’ என்று
  தொடங்கி.

5. ‘பெண்களைப் பாதுகாத்தமை உண்டோ?’ என்று சங்கித்துப் பரிஹரிக்கிறார்,
  ‘பசுக்களை’ என்று தொடங்கி.

6. ‘கோ கோபீஜந ஸங்குலம், அதீவார்த்தம்’

என்பது, ஸ்ரீவிஷ்ணு. புரா. 5. 11. 13.