முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஏழாந்திருவாய்மொழி - பா. 6

305

பார்த்து’ என்னக்கடவது அன்றோ? 1மழையால் வந்த நலிவை மலையை எடுத்து நீக்கி, அவர்கள் துன்பம் எல்லாம் போம்படி புன்முறுவல் செய்துகொண்டாயிற்று நின்றது. ‘ஆனால், இது வாராதபடி இடம் தேடி உஜ்ஜீவிக்கப் பார்த்தலோ?’ என்ன, 2ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்விடமே - ‘எனக்குச் சென்று உஜ்ஜீவிக்கலாவது ஓரிடம் உண்டோ?’ என்று நானும் தேடாநின்றேன்; ‘இங்கு ஒதுங்குவதற்கு ஓரிடம் காண்கின்றிலேன். அன்றிக்கே, மேலே சொன்ன அழகுகள் பாதகமாகிற இத்தனை அல்லது. ஒதுங்க நிழலாய் இருப்பது ஓரிடம் காண்கின்றிலேன்,’ என்னுதல்.

(5)

                        734

        உய்விடம் ஏழையர்க் கும்அசு ரர்க்கும் அரக்கர்கட்கும்
        எவ்விடம்? என்றிலங் கிமக ரம்தழைக் கும்தளிர்கொல்?
        பைவிடப் பாம்பணை யான்திருக் குண்டலக் காதுகளே
        கைவிடல் ஒன்றும்இன் றிஅடு கின்றன காண்மின்களே.

   
பொ - ரை : ‘பெண்களுக்கும் அசுரர்களுக்கும் அரக்கர்கட்கும் உய்விடம் எங்கே?’ என்றுகொண்டு விளங்கி மகரத்தின் வடிவாகத் தழைக்கின்ற தளிர்கள்தாமோ படத்தையுடைய விஷம் பொருந்திய பாம்பைப் படுக்கையாகவுடைய எம்பெருமானது குண்டலங்கள் தரித்த காதுகள்? சிறிதும் விட்டு நீங்குதல் இன்றி என்னை வருத்துகின்றன காண்மின்கள்,’ என்கிறாள்.

    வி - கு :
‘குண்டலக் காதுகள், மகரம் தழைக்கும் தளிர்கொல்? ஒன்றும் கைவிடல் இன்றி அடுகின்றன காண்மின்கள்,’ என்க. மகரம்-மகரகுண்டலங்கள்.

    ஈடு :
ஆறாம்பாட்டு. 3‘நாம் செவிப்பட்டிருக்க இவற்றை முன்னே போகவிட்டிருந்தோம்’ என்று திருக்காதில் அழகு

______________________________________________________________

1. ‘குன்றம் எடுத்தபிரான் முறுவல்’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
  ‘மழையால்’ என்று தொடங்கி.

2. ‘ஒன்றும்’ என்றதற்கு இரண்டு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்.
  முதற்பொருள், ‘ஓர் இடமும்’ என்பது. ‘அழகுகளுக்குள்ளே உய்விடமான
  ஓர் அழகும்’ என்பது இரண்டாவது பொருள்.

3. ‘காதுகள்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி ரசோக்தியாக அவதாரிகை
  அருளிச்செய்கிறார். செவிப்பட்டிருக்க-செவியாய் இருக்க என்பதும்,
  கேட்டிருக்க என்பதும் பொருள்.