வந
306 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
வந்து நலிகிறபடியைச்
சொல்லுகிறது. 1காதாட்டிக்கொண்டு சொல்லுவரே.
ஏழையர்க்கும்
அசுரர்க்கும் அரக்கர்கட்கும் உய்விடம் எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல்
- ‘அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் பெண்களுக்கும் தப்பிப்போய்ப் பிழைக்கும் இடம் எவ்விடம்?’
என்று விளங்குகின்றனவாய்க் கொண்டு மகரம் தழைக்கின்ற தளிரே? 2அசுரரும் அரக்கரும்
அழகு கண்டால் பொறுக்கமாட்டாமல் முடிவர்கள்; பெண்கள் அடையப் பெறாமல் முடிவர்கள். ‘பெண்களை
நலியுமாறு போலே அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் சினேகத்தை விளைத்துப் பாதகம் ஆகாநின்றன’ என்று
ஒரு தமிழன் கூறிவைத்தான் என்று கூறியதனைச் சீயர் கேட்டருளி, 3‘இப்பொருள்
அழகிது: ஆனாலும். அபக்ஷதர்மம்; அசுரர்களுக்கும் அரக்கர்களுக்கும் பாதகம் ஆகாநின்றது என்று இப்போது
இது சொல்லுகை, தேட்டம் அன்றே? ஆன பின்பு அது வேண்டா,’ என்று அருளிச்செய்தாராம். பை விடம்
பாம்பு அணையான் திருக்குண்டலம் காதுகள்-தன்னுடைய ஸ்பரிசத்தாலே விரிந்திருக்கிற படங்களையும்,
உகவாதார் முடியும்படியான விஷத்தையுமுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவனுடைய திருக்குண்டலக்
காதுகளே. 4‘திருக்காதுகளில் அழகு பாதகம் ஆமாறுபோலே ஆயிற்று, திருவனந்தாழ்வானுடைய
சேர்த்தியும்
_____________________________________________________________________
1. வேறும் ஒரு வகையாக
ரசோக்தியாக அவதாரிகை அருளிச்செய்கிறார்,
‘காதாட்டிக்கொண்டு சொல்லுவரே’ என்று. ‘அவனுடைய
திருமகர
குண்டலங்களும் திருக்காதுகளும் நலிகிறபடி சொல்லுகிறாள்’ என்பது,
இருபத்து
நாலாயிரப்படி.
2. ‘அழகு இருவர்க்கும்
பாதகமாம் விதம் எப்படி?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘அசுரரும்’ என்று
தொடங்கி.
3. ‘இப்பொருள் அழகிது!’
என்றது, ஒரு பகுதி உடன்பட்டபடியைத் தெரிவிக்க
வந்தது. ‘அபக்ஷதர்மம்’ என்றது,
‘பிரகரணத்துக்குச் சேராதது’ என்றபடி.
அபக்ஷதர்மம் என்றதனை விவரிக்கிறார், ‘அசுரர்களுக்கும்’
என்று தொடங்கி.
‘தேட்டம் அன்றே’ என்றது, ‘பெண்களுக்குப்பாதகம் என்று சொல்லி வருகிற
பிரகரணம் ஆகையாலே, அசுரர்களுக்குப் பாதகம் எனபதனை இங்குச் சொல்ல
வேண்டவே’ என்றபடி.
‘அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் பாதகமாமாறு போன்று,
பெண்களுக்கும் பாதகமாம்’ என்பதே முதல்
அடிக்குப் பொருளாம்.
4.
‘அழகுகளைச் சொல்லி வருகிற இவ்விடத்திலே, திருவனந்தாழ்வான் சேர்த்தியைச்
சொல்லுவான் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘திருக்காதுகளில்’
என்று தொடங்கி.
|