ப
ஏழாந்திருவாய்மொழி -
பா. 7 |
307 |
பாதகம் ஆகிறபடி.
அன்றிக்கே,
1‘பெறுகைக்கு அநந்த புருஷகாரமுண்டாய் இருக்கக்கண்டீர், நான் நோவுபடுகிறது!’ என்னுதல்.
2மேலே பாதகமாகக் கூறுப்பட்டவையும் ‘நன்று’ என்னலாம்படி இவை நலிகின்றனவாதலின்,
‘காதுகளே’ என்கிறாள். என்றது, ‘அவை, தண்ணீர்ப்பந்தல் வைத்தது என்னும்படியாக ஆயின,’
என்றபடி, ‘மாலை. . . . . . . நல்கிற்றை எல்லாம்’ என்னுமாறுபோலே. கைவிடல் ஒன்றும் இன்றி
- ஒருகாலும் கைவிடாதே; என்றது, ‘ஒருகால் விட்டுப் பற்றுமது அன்றிக்கே’ என்றபடி. அடுகின்றன-முடியாநின்றன.
காண்மின்களே - அவர்களுக்கும் எல்லாம் உருவு வெளிப்பாடாய்த் தோற்றும் என்றிருக்கிறாள்;
3‘வாயுந் திரையுகளில்’ ஆழ்வார் அன்றோ?
(6)
735
காண்மின்கள்
அன்னையார் காள்!என்று
காட்டும்
வகை அறியேன்!
நாண்மன்னு வெண்திங்கள்
கொல்,நயந்
தார்கட்கு
நச்சிலைகொல்
சேண்மன்னு நால்தடந்
தோள்பெரு
மான்தன்
திருநுதலே?
கோண்மன்னி ஆவி
அடும்கொடி
யேன்உயிர்
கோளிழைத்தே.
பொ-ரை :
‘தாய்மார்களே! பாருங்கோள் என்று காட்டுகின்ற தன்மையை அறியேன்; நீட்சி பொருந்திய வலிய
நான்கு திருத்தோள்களையுடைய கண்ணபிரானது அழகிய நெற்றியானது, எட்டாம் நாள் பிறைதானோ? அன்றி,
விரும்பினவர்கட்கு நஞ்சு வடிவாக இருப்பது ஒரு இலைதானோ? அறியேன்; கொடியேனாகிய என்னுடைய உயிரைக்
கொள்ளுவதற்கு நினைத்து வலியோடு என் உயிரை வருத்துகின்றது,’ என்கிறாள்.
வி-கு : நாள்
மன்னு வெண்திங்கள் - எட்டாம்பிறை. நச்சு - பெயர்ச்சொல்; விஷம். ‘கொடியேன் உயிர்
கோள் இழைத்துக் கோள் மன்னி ஆவி அடும்,’ என்க. கோள் - வலிமையும், கொள்ளதலும்.
__________________________________________________
1. மேலே எழுப்பிய
வினாவிற்கே வேறும் ஒரு வகையாகப் பரிகாரம்
அருளிச்செய்கிறார், ‘பெறுகைக்கு’ என்று தொடங்கி.
2. ‘காதுகளே’ என்ற ஏகாரத்திற்குப்
பொருள் அருளிச்செய்கிறார், ‘மேலே’
என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார், ‘அவை’ என்று
தொடங்கி. ‘அதற்குப் பிரமாணம் காட்டுகிறார். ‘மாலை’ என்று தொடங்கி.
இது. திருவிருத்தம்,
35.
3. ‘வாயுந்திரையுகளில்
ஆழ்வார் அன்றோ’ என்றது, வாயுந்திரையுகளும்’
என்ற திருவாய்மொழியைப் பாடிய ஆழ்வார் அல்லரோ?’
என்றபடி.
|