முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

மண

முதல் திருவாய்மொழி - பா. 6

31

    மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா- 1இவர்தாம் விண்ணுளாரில் ஒருவரே அன்றோ? 2இவற்றுக்குத் தந்நிலமாவது, நான் இவை இருந்த இடம் தேடிச் சென்று கழுத்திலே கயிறு இட்டுக் கொடு நிற்கவல்லேன் ஒருவனாவது; இங்ஙனே இருக்கிற என்னைப் பெற்றால் இவை என் செய்யா? மற்று நீயும் விட்டால். 3இரட்சகனான நீ விட்டிலையாகில், மஹாராஜர் வாலியை வென்றாற்போலே நானும் இந்திரியங்களை வெல்லேனோ?’ 6‘அந்த மனத்தினை அடக்குதல் காற்றை அடக்க முடியாதது போலச் செய்ய முடியாத காரியமாக நான் நினைக்கிறேன்,’ என்றான் அன்றோ? என்றது, ‘காற்றை ஓரிடத்தில் கட்டிவைக்கில்,’ அன்றோ மனத்தினை நியமிக்கலாவது?’ என்றபடி. அன்றிக்கே, 6‘இந்திரியங்களை அடக்குதல் அரிது’ என்று சொல்லுகிறாயாகில் நம் பக்கலிலே மனத்தினை வை’ என்று அருளிச்செய்த நீயும் விட்டால்’ என்னலுமாம். 7‘நான் விட்டிலேனே! உம்மைக் கைவிடுகையாவது என்?’ என்றான். ‘ஆகில்,

 

1. ‘மண்ணுள்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘இவர்தாம்’ என்று தொடங்கி.
  ‘மண்ணுள் என்னை’ என்கையாலே, முன் விண்ணுளார் என்பது தோற்றுகிறது.

2. ‘மண்ணுள் என்னை’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘இவற்றுக்கு’ என்று
  தொடங்கி.

3. ‘எல்லாரும் விட்டு’ என்றது, ‘தாய் தந்தை உறவினர் முதலிய எல்லாரும் விட்டாலும்’
  என்றபடி. ‘விழுந்து தரிக்கும் பூமியான’ என்றது, ‘அவர்கர் விட்டதே காரணமாக
  மேல் விழுந்து தரிக்கும் பூமியான’ என்றபடி.

4. ‘நான் விடாவிடில் நீர் செய்வது என்?’ என்ன, ‘இரட்சகனான’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

5. ‘அவன் கைவிட்டால் இந்திரியங்களை வெல்லல் அரிதோ?’ என்ன, ‘அந்த
  மனத்தினை’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

        ‘தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸூதுஷ்கரம்’

என்பது, ஸ்ரீகீதை, 6:34.

6. ‘மற்ற நீயும் விட்டால்’ என்பதற்கு, வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார்,
  இந்திரியங்களை’ என்று தொடங்கி. ‘மச்சித்த: ஸததம் பவ’ என்றதனைத் திருவுள்ளம்
  பற்றி, ‘நம் பக்கலிலே மனத்தினை வை என்ற நீயும்’ என்று அருளிச்செய்கிறார்.

7. மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘நான் விட்டிலேனே என்று தொடங்கி.