736
310 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
736
கோளிழைத் தாமரையும்
கொடியும்
பவளமும்
வில்லும்
கோளிழைத் தண்முத்த
மும்தளி
ரும்குளிர்
வான்பிறையும்
கோளிழை
யாவுடைய கொழுஞ்சோதி
வட்டங்கொல்?
கண்ணன்
கோளிழை வாண்முக
மாய்க்கொடி
யேன்உயிர்
கொள்கின்றதே.
பொ - ரை :
தன் ஒளியையே தனக்கு ஆபரணமாகவுடைய தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் தன் ஒளியையே தனக்கு
ஆபரணமாகவுடைய குளிரந்த முத்தமும் தளிரும் குளிர்ந்த பெரிய எட்டாம் பிறையுமாகிய இவற்றையெல்லாம்
தன்னகத்தேயுடைய, கொள்ளப்பட்ட ஆபரணத்தையுடைய சோதி மண்டலமோ? கண்ணபிரானுடைய, தன்னழகே
தனக்கு ஆபரணமாய் ஒளியையுடைத்தான முகமாய்க்கொண்டு கொடியேனுடைய உயிரைக் கொள்ளை கொள்ளுகின்றது.
வி - கு :
‘கண்ணன் கோள் இழை வாள்முகம், தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் தண்முத்தமும் தளிரும்
பிறையும் ஆகிய இவற்றைத் தன்னகத்தேயுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? அத்தகைய சோதி வட்டமானது,
வாண்முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றது?’ என்று சொற்களைக் கொணர்ந்து கூட்டி முடித்து
கொள்க.
ஈடு : எட்டாம்
பாட்டு. 1‘தலையான பேரை நெற்றிக்கையிலே விட்டுக் காட்டிக்கொடுக்க ஒண்ணாது’ என்று,
மேலே நலிந்தவை எல்லாம் சேர ஒருமுகமாய் வந்து நலிகிறபடி சொல்லுகிறது. அங்கும் இங்கும் சிதறிக்
கிடந்த படையைப் பகைவர்கள் வந்து முடுகினவாறே ஒன்றாகத் திரட்டி ஒரு காலே தள்ளுவாரைப்
போலே, தனித்தனியே நலிந்த அழகுகள் எல்லாம் திரள வந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள்.
கோள் இழைத் தாமரையும்-சாதி
ஒன்றாய் இருக்கச்செய்தேயும், ‘பொற்கால் தாமரை, நூற்கால் தாமரை’ என்பனவாகத் தாமரையில்
சில பேதங்கள் உள அன்றோ? அதில் நூற்கால் தாமரை என்னுதல்;
______________________________________________________________
1. மேலே
கூறிய அழகுகள் எல்லாவற்றினுடைய விருப்பத்தையும்
ரசோக்தியாலே அருளிச்செய்கிறார், ‘தலையான’
என்று தொடங்கி.
தலையான பேரை - நெற்றி என்பது நேர்ப்பொருள். ‘பிரதாநரை’ என்பது
வேறும்
ஒரு பொருள். நெற்றிக் கை - முன் தூசி. மேலே கூறியதனைத்
திருஷ்டாந்தத்தோடு விவரணம் செய்கிறார்,
‘அங்கும் இங்கும்’ என்று
தொடங்கி.
|