அன
ஏழாந்திருவாய்மொழி -
பா. 10 |
311 |
அன்றிக்கே, ‘கொள்கையிலே
துணிந்திருக்கிற தாமரை’ என்னுதல்; அன்றிக்கே, ‘தன்னழகே தனக்கு ஆபரணமாகவுடைய தாமரை என்னுதல்;
அன்றிக்கே, ‘ஒளியே ஆபரணமான தாமரை’ என்னுதல். திருக்கண்ணும்-திருக்கண்களும், கொடியும் -திருமூக்கும்.
பவளமும்-திரு அதரமும், வில்லும் - திருப்புருவமும். கோள் இழைத் தண்முத்தமும்-தன் ஒளியே ஆபரணமாகவுடைய
குளிர்ந்த பற்களின் நிரையும். அன்றிக்கே, ‘இழையிலே கோப்புண்ட முத்துப்போலே இருக்கிற
குளிர்ந்த பற்கள்’ என்னுதல், ‘தளிரும் - திருக்காதும். குளிர் வான் பிறையும்-திருநெற்றியும்.
1‘ஆக, நேத்திரமானவரும் ‘மூக்கு வலியோம்’ என்றவரும், வாய்சொல்லிப்
போனவரும், ‘கீழ் மேல் ஆயிற்றோ’ என்று வளைத்துக்கொடுபோனவரும், வாய்க்கரையிலே
இருந்தவரும். தாம் செவிப்பட்டவாறே போனவரும், ‘இவற்றுக்கு நெற்றி நாம்’ என்று போனவரும் எல்லாம்
ஒருமுகமாய்த் திரண்டு வந்து’ என்றபடி.
கோள் இழையாவுடைய
கொழுஞ்சோதி வட்டம்கொல்-கொள்ளப்ட்ட ஆபரணத்தையுடைத்தான ஜோதி மண்டலமோ உருவகம்
இருக்கிறபடி? அன்றிக்கே, ‘தன்னழகே தனக்கு ஆபரணமாய் இருக்கது ஒரு ஜோதி மண்டலமோ?’ என்னுதல்.
கண்ண் கோள் இழை வாண்முகமாய்-கண்ணனுடைய, தன்னழகே தனக்கு ஆபரணமாய் ஒளியையுடைத்தான முகம்
என்று ஒரு வியாஜத்தை இட்டு. கொடியேன் உயிர் கொள்கின்றதே-வாழுங்காலத்தில் கெடும்படியான பாவத்தைச்
செய்த என்னுடைய உயிரைக் கொள்கின்றது, கோள் இழையாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்?
‘உயிர் பெறுங்காலத்திலே உயிர் இழக்கும்படியான பாபத்தைச் செய்தேன்’ என்பாள், ‘கொடியேன்’
என்கிறாள்.
(8)
737
கொள்கின்ற
கோள்இரு ளைச்சுகிர்ந்
திட்ட
கொழுஞ்சுருளின்
உள்கொண்ட
நீலநன் னூல்தழை
கொல்?அன்று
மாயன்குழல்
விள்கின்ற பூந்தண்
துழாய்விரை
நாறவந்து
என்னுயிரைக்
கள்கின்ற வாறுஅறி
யீர் அன்னை
மீர்!கழ
றாநிற்றிரே.
_______________________________________________________________
1. மேலே
போந்த ஏழு திருப்பாசுரங்களிலும் கூறியவற்றையெல்லாம்
தொகுத்து முறையே அருளிச்செய்கிறார்,
‘ஆக’ என்று தொடங்கி.
|