முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

1இத

314

திருவாய்மொழி - ஏழாம் பத்து

1இத்தலை அத்தலையானபடி. 2சம்பந்தம் இல்லாதவன் அபகரித்தால் அதனைப் போக்கலாம்; சம்பந்தமுள்ளவன் அபகரித்தால் பரிகாரம் இல்லை அன்றோ? 3இது கைப்பட்டவாறே ஒரு பிரமாணம் கொடு நின்று வழக்குப் பேசத் தொடங்கும் அன்றோ அவன்? அன்னைமீர் கழறாநிற்றிரே - நீங்கள் வருந்தி இக்களவுக்கு நானும் 4பெருநிலை நின்று கூட்டுப் பட்டேனாகப் பொடியாநின்றீர்கோள். 5இந்த உருவு வெளிப்பாட்டைத் தடை செய்தலும் வேண்டாவோ? ஒரு நியமித்தல் நியமிக்கப்படுதல் என்னும் தன்மையேயோ வேண்டுவது பொடி கைக்கு? கழறல் - நோவச்சொல்லுதல். 

(9)

                 738

        நிற்றிமுற் றத்துள்என்று நெரித்த
             கையராய் என்னைநீர்
        சுற்றியும் சூழ்ந்தும் வைதிர்
             சுடர்ச்சோதி மணிநிறமாய்
        முற்றஇம் மூவுல கும்விரி
             கின்ற சுடர்முடிக்கே
        ஒற்றுமை கொண்டதுஉள் ளம்அன்னை
             மீர்!நசை என்நுங்கட்கே?

________________________________________________________________

1. அதனாற்பலித்த பொருளை அருளிச்செய்கிறார், ‘இத்தலை
  அத்தலையானபடி’ என்று. 

    ‘பண்டேஉன் தொண்டாம் பழவுயிரை என்னதென்று
     கொண்டேனைக் கள்வன்என்று கூறாதே-மண்டலத்தோர்
     புள்வாய் பிளந்த புயலே! உனைக்‘கச்சிக்
     கள்வா!’ என்று ஓதுவதுஎன் கண்டு?’

என்பது, நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி.

2. ‘ஆனால், அவன் களவு காணாதவாறு விலக்கினாலோ?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘சம்பந்தம் இல்லாதவன்’ என்று தொடங்கி.

3. ‘பரிகாரம் இல்லாமைக்குக் காரணம் யாது?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘இது கைப்பட்டவாறே’ என்று தொடங்கி. இங்கே,

    ‘த்வம்மே ஹம்மே குதஸ்தத் ததபிகுத:
        இதம் வேத மூல ப்ரமாணாத்
    ஏதச்சாநாதி ஹித்தாத் அநுபவவிபவாத்
        ஸோபி ஸாக்ரோஸ ஏவ
    க்வாக்ரோஸ: கஸ்ய கீதாதிஷூ மமவிதித:
        கோத்ர ஸாக்ஷீ ஸூதீ: ஸ்யாத்
    ஹந்த த்வத் பக்ஷபாதீ ஸஇதி  
         ந்ருகலஹே ம்ருக்ய மத்யஸ்த் த்வத்வம்’

என்று பட்டர் அருளிச்செய்த சுலோகம் அநுசந்தேயம்.

4. பெருநிலை - சகாயம்.

5. ‘அன்னைமீர்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘இந்த உருவு
  வெளிப்பாட்டை’ என்று தொடங்கி.