முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

ஏழாந்திருவாய்மொழி - பா. 11

317

போக்கி, பொடியக் கடவர்களோ? 1தக்க வந்து வந்தவர்களையும் பெற்ற சம்பந்தம் கொண்டு ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கக் கடவதோ?

(10)

                         739

        கட்குஅரிய பிரமன் சிவன்இந் திரன்என்ற இவர்க்கும்
        கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
        உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
        உட்குஉடை வானவ ரோடுஉட னாய்என்றும் மாயாரே.
 

    பொ - ரை : மக்கள் கண்களால் காண அரிய பிரமன் என்ன, சிவன் என்ன, இந்திரன் என்ன, ஆகிய இவர்கட்கும் காண அரிய கண்ணபிரானைத் திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த மிடுக்கையுடைய ஆயிரம் திருப்பாசுரங்களுள் ஒப்பற்ற இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள், ஆற்றலையுடையவாரன நித்தியசூரிகளோடு ஒரு கோவையாய் எப்பொழுதும் பேரின்பத்தை அனுபவிக்கப் பெறுவர்கள்.

    வி - கு : உட்கு - அச்சமுமாம். மாயார் - அழியார்; என்றது, ‘நித்தியானுபவத்தை அனுபவிக்கப்பெறுவர்’ என்றபடி.

    ஈடு : முடிவில், 2‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்கள், பகவானுடைய பிரிவால் வருந்தாமல், நித்தியசூரிகளோடே கூடி நித்தியானுபவம் பண்ணப் பெறுவார்கள்,’ என்கிறார்.

    கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும் கட்கு அரிய கண்ணனை - மக்களுடைய கண்களுக்குப் புலப்படாதபடி இருக்கிற பிரமன் சிவன் இந்திரன் என்னும் இவர்களுக்கும் கண்களுக்குப் புலப்படாதபடி இருக்கிற கிருஷ்ணனை. 3பிரமன் முதலானோர்களுடைய கண்களுக்குக் காண முடியாதவனாய் இருக்கிற கிருஷ்ணன், மறக்க ஒண்ணாதபடி உருவு வெளிப்பாடாய்த் தோன்ற, அதனாலே நலிவு பட்டு, போன போன இடம் எங்கும் சூழ்ந்து

________________________________________________________________

1. ‘அன்னைமீர்’ என்பதற்கு, வேறும் ஒரு பாவம் அருளிச்செய்கிறார், ‘தக்க’
  என்று தொடங்கி.

2. திருப்பாசுரத்தின் பின்னிரண்டு அடிகளைத் திருவுள்ளம் பற்றி அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

3. ‘கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும் கட்கு அரிய
  கண்ணன்’ என்றதனால், பலித்த பொருளை அருளிச்செய்கிறார், ‘பிரமன்’
  என்று தொடங்கி.