741
எட்டாந்திருவாய்மொழி -
பா. 2 |
325 |
741
அங்கண் மலர்த்தண்
துழாய்முடி அச்சுத னே!அருளாய்
திங்களும் ஞாயிறு
மாய்ச் செழும் பல்சுட ராய்இருளாய்ப்
பொங்கு பொழிமழை
யாய்ப்புக ழாய்ப்பழி யாய்ப்பின்னும் நீ
வெங்கண்1வெங்
கூற்றமு மாம்இவை என்ன விசித்திரமே!
பொ - ரை :
அழகிய தேனோடு கூடிய மலர்களையுடைய குளிர்ந்த திருத்துழாயை முடியிலேயுடைய அச்சுதனே! சந்திரனும்
சூரியனுமாகி அழகிய பல வகையான நக்ஷத்திரங்களாகி இருளாகியும், மிகுதியாகப் பெய்கின்ற மழையாகிப்
புகழாகிப் பழியாகி. அதற்கு மேலே தறுகண்மையும் கொடுமையுமுடைய யமனுமாய் இருக்கின்ற இவை என்ன
ஆச்சரியம்! அருளிச்செய்வாய்.
ஈடு : இரண்டாம்
பாட்டு. 2சந்திரன் சூரியன் முதலான பொருள்கள் முழுதும் தனக்கு விபூதியாகவுடையனாய்
இருக்கிற படியை அருளிச்செய்கிறார்.
அம் கள் மலர்த்
தண் துழாய் முடி அச்சுதனே - அழகிதாய்த் தேனோடு கூடின மலரையுடைத்தாய்க் குளிர்ந்திருந்துள்ள திருத்துழாயைத்
திருமுடியிலேயுடையையாய், 3அந்த ஒப்பனையால் வந்த அழகுக்கு ஒரு நாளும் ஒரு வேறுபாடும்
இன்றிக்கே என்றும் ஒக்க நித்தியாம்படி இருக்கிறவனே! 4வைத்த வளையத்தைப்
போன்றும் போக்கியமாகிறதாயிற்று விபூதி அனுபவம் இவர்க்கு. 5‘மேல் திருவாய்மொழியிலே
‘விள்கின்ற பூந்தண் துழாய் விரை நாற வந்து’ என்று சொன்னதை நினைக்கிறார்’ என்று.
பிள்ளான்
_____________________________________________________________
1. ‘கூற்றமுமாய்’ என்பதும்
பாடம்.
2. பின் மூன்று அடிகளைக்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
3. ‘அச்சுதன்’ என்பதன்
பொருள், ‘அந்த ஒப்பனையால்’ என்று தொடங்கும்
வாக்கியம். அச்சுதன் -அழியாதவன்.
4. ‘விபூதியைப்பற்றிச்
சொல்லுகிற இவ்விடத்திலே ஒப்பனை அழகினைச்
சொல்லுவான் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘வைத்த
வளையத்தைப் போன்றும்’ என்று தொடங்கி.
5. மேலதற்கே
வேறும் ஒரு பரிகாரம் அருளிச்செய்கிறார், ‘மேல்
திருவாய்மொழியிலே’ என்று தொடங்கி.
|