முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

எட்டாந்திருவாய்மொழி - பா. 3

327

வெங்கூற்றம்-அந்தகன் ‘தண்ணீர்’ என்னும்படி வெவ்விய கூற்றமுமாம். என்றது, அழித்தல் தொழிலில் 2உருத்திரனுக்கு அந்தர்யாமியாய் இருக்கும் தன்மையைச் சொன்னபடி. இவை என்ன விசித்திரமே-இவை என்ன ஆச்சிரயந்தான்! அருளாய்.

(2)

                           742

        சித்திரத் தேர்வல வா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
        எத்தனை யோர்உக மும்அவை யாய்அவற் றுள்இயலும்
        ஒத்தஒண் பல்பொருள் கள்உலப் பில்லன வாய்வியவாய்
        1வித்தகத் தாய்நிற்றி நீஇவை என்ன விடமங்களே!

    பொ-ரை : ‘அழகிய தேரை நடத்தியவனே! அழகிய சக்கரத்தையுடையவனே! யுகங்கள் அவையுமாகி, அவற்றுள் நடக்கின்ற ஒத்தனவாயும் ஒள்ளியவாயும் எல்லையில்லாதனவாயும் இருக்கின்றவாகிய பல பொருள்களாகியும் அவற்றின் வேறுபாடுகளாகியும் ஆச்சிரயப்படத்தக்கவனாய் நீ நிற்கின்றாய்; இவை என்ன வேறுபாடுகள்! அருளிச்செய்ய வேண்டும்,’ என்கிறார்.

    வி - கு :
‘எத்தனையோர் உகம் அவையுமாய்’ எனப் பிரித்துக் கூட்டுக. ‘ஒத்த ஒண் உலப்பு இல்லன பல்பொருள்களாய்’ என்க. வியவு - வேறுபாடு, விடமம் - வேறுபாடு.

    ஈடு :
மூன்றாம் பாட்டு. 2‘கிருதயுகம் முதலான யுகங்களையும், அந்த அந்தக் காலங்களில் உண்டான தேவர் மனிதர் முதலான பொருள்களையும் விபூதியாகவுடையவன்,’ என்கிறார்.

    சித்திரம் தேர் வலவா - விசித்திரமாம்படியாகத் தேரை நடத்த வல்லவனே! 3விசித்திரமாவது, துரோணன் கையும் அணியும் வகுத்து வாசலைப் பற்றி நிற்க, அவனை வளைந்து அவனுக்கு அவ்வருகே தேரைக் கொடுபோய் நிறுத்தி, அவன் போர் செய்தற்கு இடம் அறுத்தல். அன்றிக்கே, ‘வீடுமன் கையில் அம்பு தூரப்போய்

______________________________________________________________

1. ‘வித்தகத்தால்’ என்பதும் பாடம்.

2. பின் மூன்று அடிகளையும் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

3. விசித்திரத்தை இரண்டு வகையாக அருளிச்செய்கிறார், ‘விசித்திரமாவது’
  என்று தொடங்கியும், ‘அன்றிக்கே’ என்று தொடங்கியும். கையும் அணியும்
  வகுத்து - போரிலே வியூகமாகப் பிரித்து.