முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

328

திருவாய்மொழி - ஏழாம் பத்து

விழும்; அருச்சுனன் கையில் அம்பு இவ்வருகே விழும்; ஆகையாலே, அவன் அம்பு விடப் புக்கவாறே தேரைப் பின்னே கழலக் கொடுபோயும், இவன் அம்பு விடப் புக்கவாறே தேரைக் கிட்ட நிறுத்தியும், இப்படித் தேரை நடத்தும்படியை நோக்கி’ என்னவுமாம். திருச்சக்கரத்தாய் - 1பகலை இரவாக்கும் பரிகரத்தையுடையவனே! எத்தனையோ உலமுமவையாய் - கிருத்யுகம் முதலான யுகங்களுக்கெல்லாம் நிர்வாககனாய். அவற்றுள் இயலும் - அவற்றுக்குள்ளே வாழ்கிற. 2ஒத்த வியவாய் ஒண்பல் பொருள்கள் உலப்பில்லனவாய் - ஓர் ஆகாரத்தாலே ஒத்தும், வேறு ஆகாரத்தாலே வேறுபட்டும் இருப்பனவுமாய், விலட்சணமுமான பல வகைப்பட்ட பொருள்கள் பலவற்றையுடையையாய். என்றது, ‘தேவர் மனிதர் முதலிய சாதியாலே ஒத்தும், வடிவு வேறுபட்டாலே வேறுபட்டும் இருக்கிற பல பொருள்களுமாய்’ என்றபடி. அன்றிக்கே, எல்லா ஆத்துமாக்களும் ஞானத்தாலே ஒத்திருக்கச் செய்தேயும் நான் நீ முதலிய வேறுபாட்டாலே வேறுபட்டவர்களாய் இருப்பர்கள் அன்றோ? அவற்றைத் தெரிவித்தபடி ஆகலுமாம். வித்தகத்தாய் நிற்றி நீ - இப்படி ஆச்சரியப்படத் தக்கவனாய்க் கொண்டு நில்லாநின்றான் நீ. இவை என்ன விடமங்களே - இவை ஏன்ன சேராச் சேர்த்தியான செயல்கள்தாம்?

(3)

             743

        கள்ளவிழ் தாமரைக் கண்கண்ண
             னே!எனக்கு ஒன்று அருளாய்
        உள்ள தும் இல்லது மாய்உலப்
             பில்லன வாய்வியவாய்
        வெள்ளத் தடங்கட லுள்விட
             நாகணை மேன்மருவி
        உள்ளப் பல்யோகு செய்தி
             இவைஎன்ன உபாயங்களே!

    பொ - ரை : ‘தேனோடு மலர்கின்ற தாமரை போன்ற திருக்கண்களையுடைய கண்ணனே! அழிதல் இல்லாததாய் இருக்கின்ற சித்து ஆகியும், அதினின்றும் வேறுபட்டதாய் இருக்கின்ற அழிந்து

_____________________________________________________________

1. ‘சித்திரத்தேர் வலவா’ என்றதன் பின், ‘திருச்சக்கரத்தாய்’ என்றதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘பகலை இரவாக்கும்’ என்று தொடங்கி. இதுவும் ஒரு
  விசித்திரம் என்பது கருத்து.

2. பின் இரண்டு அடிகட்குக் கருத்து, ‘ஒத்திருப்பனவுமாய்,
  வியவாயிருப்பனவுமாய், உலப்பு இல்லனவுமான ஒண்பல்
  பொருள்களையுடையையாய்க் கொண்டு வித்தகத்தாய் நிற்றி நீ’
  என்பதாம். வியவாய் -வேறுபட்டனவாய்.