முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

எட்டாந்திருவாய்மொழி - பா. 4

329

போகின்ற அசித்தாகியும், திருப்பாற்கடலில் விஷம் பொருந்திய ஆதிசேஷ சயனத்தின்மேல் பொருந்தித் திருவுள்ளத்தில் பல விதமான காக்கும் உபாயங்களைச் சிந்தனை செய்கிறாய்; இவை என்ன விரகுகள் தாம்! எனக்கு ஒன்று அருளிச்செய்யவேண்டும்,’ என்கிறார். 

    வி-கு :
‘உலப்பு இல்லன உள்ளதுமாய், வியவாய் இல்லதுமாய்’ என்க. உள்ளது-ஆத்துமா. இல்லது - அசித்து.

    ஈடு :
நான்காம் பாட்டு. 1உலகத்தில் நித்திய அநித்தியமான பொருள்களை விபூதியாகவுடையனாய் இருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.

    கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே - அப்போது அலர்ந்த தாமரைப்பூப்போலே இருக்கின்ற திருக்கண்களையுடையவனாய்ப் பவ்யனாய் இருக்கிறவனே! 2அவனுடைய திருக்கண்கள் போலே ஆயிற்று, இவர்க்கு விபூதியும் கவர்ச்சியாய் இருக்கிறபடி. அன்றிக்கே, ‘திருக்கண்களைப் போன்று துன்பத்தைச் செய்வதாகா நின்றது ஆயிற்று விபூதி அனுபவமும் இவர்க்கு,’ என்னுதல். 3‘துன்பத்தைச் செய்வதாவது என்?’ என்னில், ‘இன்னது’ என்று நிச்சயிக்கமாட்டாதே ஐயுற்றுப் பட்டது ஒரு துக்கம் உண்டே அன்றோ? அதுவும் துன்பத்தைச் செய்வதாக இருக்குமே? அதனைச் சொல்லுகிறது. அன்றிக்கே, ‘மேல் திருவாய்மொழியிலே, ‘சூழவும் தாமரை நாண்மலர்போல் வந்து தோன்றும்’ என்றதனை நினைக்கிறார,்’ என்று பிள்ளான் பணிக்கும். 4அதனைச் சீயர் கேட்டருளி, ‘மேலே ஓடுகிறரீதியின்படியே இதுவும் ஆகப்பெற்றதாகிர் அழகிது!

______________________________________________________________________________

1. ‘உள்ளதும் இல்லதுமாய்’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘உலகத்தைப் பற்றிப் பேசும் இவ்விடத்தில் கண் அழகினைச் சொல்லுவான் என்?’
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அவனுடைய’ என்று தொடங்கி.

3. ‘பிரிந்திருக்கும் நிலையிலே அன்றோ உலக அனுபவம் துன்பத்தைச் செய்வதாக
  இருப்பது? இப்போது துன்பத்தைச் செய்வதாகிறபடி என்?’ என்கிற சங்கையை
  அநுவதித்துப் பரிகரிக்கிறார், ‘துன்பத்தைச் செய்வதாவது’ என்று தொடங்கி. என்றது,
  ‘முடிச்சோதியாய்’ என்ற திருவாய்மொழியிற் கூறியபடியே சந்தேகமாய்க்கொண்டு
  பாதகமாகிறது என்றபடி.

4. பிள்ளான் நிர்வாகத்துக்கு, நஞ்சீயர் அருளிச்செய்யும் படியை அருளிச்செய்கிறார்,
  ‘அதனை’ என்று தொடங்கி.