ப
எட்டாந்திருவாய்மொழி -
பா. 4 |
331 |
பின்னும் சேருமாறு யாங்ஙனம்?’
எனின், அசித்தாவது, அழிவதாய்க் கொண்டு விடக்கூடியதாக இருக்கும்; ஆத்துமவஸ்து ஒரே தன்மையதாய்க்கொண்டு
கொள்ளக்கூடியதாக இருக்கும்; இவை இரண்டையும் நியமிப்பவனாய் இருப்பான் ஈஸ்வரன்: ‘இச்சேதனன்தானும்,
தான் செய்தது ஒரு கர்மமும் தனக்கு என ஒரு ருசியுமாய் இருக்கையாலே, இவன், தனக்கு என்ன ஓர் இச்சை
பிறக்கில் அல்லது நம்மைப் பெற விரகு அற்று இருந்தது; இவனுக்கோ, அது இல்லையாய் இருந்தது; இனிச்
செய்யும்படி என்?’ என்று, இவன், ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்றால் செய்யுமதனை,
இவன் தலையிலே இசைவு இன்றிக்கே இருக்கச் செய்தே, ‘இவன் நம்மைக் கிட்டினானாம் விரகு ஏதோ?’
என்று அதற்கு உறுப்பாக உபாய சிந்தை செய்து திருக்கண்வளர்ந்தருளுகிறபடி’ என்க. இவை என்ன உபாயங்களே
- 1சேதநர் பலரானால் அவ்வவருடைய இரட்சணங்களும் பலவாயே அன்றோ இருப்பன? அதற்குத்
தகுதியாக உபாயங்களையும் அறியுமே முற்றறிவினன் ஆகையாலே. இவை என்ன விரகுகளே!
(4)
744
பாசங்கள் நீக்கிஎன்
னைஉனக் கேஅறக் கொண்டிட்டுநீ
வாச மலர்த்தண்
துழாய்முடி மாயவ னே!அருளாய்
காயமும் சீவனு
மாய்க்கழி வாய்ப்பிறப் பாய்பின்னும் நீ
மாயங்கள் செய்துவைத்
தி;இவை என்ன மயக்குகளே.
பொ - ரை :
‘சரீரமும் ஆத்துமாவுமாகியும். இறப்பாகிப் பிறப்பாகியும் இருக்கின்ற வாசனை பொருந்திய மலர்களையுடைய
குளிர்ந்த திருத்துழாயினைத் தரித்த திருமுடியையுடைய மாயவனே! நீ என்னுடைய பாசங்களை எல்லாம்
நீக்கி என்னை உனக்கே அடிமையாகக் கொண்டும், அதற்கு மேலே நீ இச்சரீரத்தோடே பொருத்தி வைத்திருக்கின்றாய்;
இவை என்ன மயக்கங்கள்? அருளிச்செய்ய வேண்டும்’ என்கிறார்.
வி - கு :
‘கழிவாய்ப் பிறப்பாய் இருக்கின்ற முடி மாயவனே!’ எனக் கூட்டுக. ‘நீக்க அறக்கொண்டிட்டும்
பின்னும் வைத்தி,’ என்க.
_________________________________________________
1. ‘உபாயங்களே’
என்ற பண்மைக்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘சேதநர்
பலரானால்’ என்று தொடங்கி.
|