முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

எட்டாந்திருவாய்மொழி - பா. 7

335

    துயரங்கள் செய்யும் கண்ணா-துக்கங்களைச்செயக்கூடிய கிருஷ்ணனே! ‘எதனாலே நலிவது?’ என்னில், ‘முடிச்சோதி’ என்ற திருவாய்மொழியிற்கூறியபடியே திருமுடியில் அழகைக் காட்டியாயிற்று. சுடர் நீள் முடியாய்- 1விபூதியைச் சொல்லுவதும் திருமுடியைப் போன்று பாதகம் ஆகாநின்றதாயிற்று. அன்றிக்கே, ‘‘முற்ற இம்மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே ஒற்றுமை கொண்டது’ என்றது, ‘பின்னாட்டுகிறது,’ என்று பிள்ளான் பணிப்பர். அருளாய் - 2அவனைக் கேட்டு அறிய வேண்டுகையாலே பாதகமாம் அன்றோ? துயரம் செய் மானங்களாய் - 3‘அடியவனான நான்’ என்கிற அபிமானம் அடிக்கழஞ்சு பெற்றிருக்கும். அங்ஙனன்றிக்கே, ஸோஹம் - அந்த நான்’ என்று துக்கங்களைச் செய்யும் அபிமானங்களாய். மதனாகி உகவைகளாய் - களிப்பும் அதற்கு அடியான உகவையுமாய். துயரம் செய் காமங்களாய் - 4‘பொருளின் தொடர்பினால் அப்பொருளில் விருப்பம் முதலியன உண்டாய்ப் புத்தி கெட்டுக் கெடுகின்றான்’ என்கிறபடியே, கேட்டினை எல்லையாகவுடைய காமங்களாய்; 5அங்ஙன் அன்றே, பகவத் காமம்? துலையாய் - பிரமாணமாய்; 6நிறுக்குமதாய். நிலையாய் நடையாய் - தாவரங்களும் சங்கமங்களும். அன்றிக்கே, நிற்றல் நடத்தல்களைச் சொல்லுதலுமாம். துயரங்கள் செய்து வைத்தி - இப்படித் துக்கங்

______________________________________________________________________________

1. உலகைப்பற்றிச் சொல்லுகிற இடத்தில் திருமுடியைச் சொன்னதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘விபூதியைச் சொல்லுவதும்’ என்று தொடங்கி. விபூதி-உலகம்;
  ஐஸ்வர்யம். ‘திருமுடியைப் போன்று’ என்றது, ‘நிற்றி முற்றத்துள்’ (7. 7 : 10.) என்ற
  திருப்பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி.

2. ‘விபூதி அனுசந்தானமும் திருமுடியும் பாதகம் ஆகைக்குச் காரணம் என்?’ என்னில்,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அவனை’ என்று தொடங்கி. ‘என்றது, ‘முடிச்சோதி’
  என்ற திருவாய்மொழியிற் படியே அவனைக் கேட்டறிய வேண்டுகையாலே என்றபடி.

3. ‘துயரம் செய்யாத மானமும் உண்டோ? இப்படி விசேடிக்கிறது என்?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘அடியவனான நான்’ என்று தொடங்கி.

4. ‘ஸங்காத் ஸம்ஜாயதே காம: புத்திநாஸாத்ப்ரணஸ்யதி’

என்பன, ஸ்ரீகீதை, 2. 62 : 63.

5. ‘துயரம் செய்யாத காமம் உண்டோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘அங்ஙன் அன்றே’ என்று தொடங்கி.

6. ‘துலை’ என்ற சொல் பிரமாணத்தைக் காட்டுமோ?’ என்ன ‘நிறுக்குமதாய்’ என்கிறார்.
  துலை-நிறைகோல்.