க
336 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
களைச் செய்வியாநின்றாய்.
இவை என்ன 1சுண்டாயங்கள்-உனக்கு விளையாட்டாக இராநின்றது, எங்களுக்குத் துக்கத்திற்குக்
காரணமாக இராநின்றது.
(7)
747
என்னசுண் டாயங்க
ளால்2நின்றிட்
டாய்என்னை
ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை
என்றுஉன்னை
யாவர்க்குந்
தேற்றரியை
முன்னிய மூவுல
கும்மவை
யாய்அவற்
றைப்படைத்தும்
பின்னும்உள்
ளாய்!புறத் தாய்!இவை
என்ன இயற்கைகளே.
பொ - ரை :
என்னை ஆளுகின்ற கண்ணனே! என்ன விளையாட்டு களையுடையையாய் நிற்கிறாய்? இப்படிப்பட்ட தன்மையையுடையை
என்று உன்னைத் தெளிந்துகோடற்கு எத்தகைய ஞானிகட்கும் அரியவனாய் இருக்கின்றாய்; பழைமையான
மூன்று உலகங்களுமாகியும் அவற்றைப் படைத்தும் அதற்கு மேலே பொருள்கட்கு உள்ளும் இருக்கின்றாய்;
புறத்தும் இருக்கின்றாய்; இவை என்ன தன்மைகள்? அருளிச்செய்ய வேண்டும்.
வி-கு : தேற
அரியை-தேற்றரியை. முன்னிய-பழைமையான.
ஈடு : எட்டாம் பாட்டு.
3‘எல்லா உலகங்களையும் படைத்து உள்ளும் புறம்பு பரந்து இப்படி நிர்வகித்து வைத்து
அறிய முடியாதவனாய் இருக்கிற இது என்ன ஆச்சரியம்!’ என்கிறார்.
என்ன சுண்டாயங்களால்
நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா - என்ன விளையாட்டுகளையுடையையாய் நிற்கிறாய், என்னை
அடிமை கொள்ளுகிற கிருஷ்ணனே! இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற அரியை -இன்ன
படிப்பட்ட தன்மையையுடையை என்று, எல்லாப் பொருள்களுக்கும் காரணனாய் இருக்கிற உன்னை, எத்தனையேனும்
மிகுதியுற்ற ஞானத்தையுடையவர்களாலும் அறிய ஒண்ணாதபடி நிற்புத்தி: 4‘பிரமனும்
அவனுடைய தன்மையை மிக வருந்தியும் சிறிதும் அறியமாட்டான்,’ என்கிறபடியே.
______________________________________________________________
1. சுண்டாயங்கள் விளையாட்டும்
தன்பொருட்டுச் செய்யும் காரியமும்.
2. ‘எங்ஙனே நின்றிட்டாய்
என் கண்ணா!’ என்பதும் பாடம்.
3. திருப்பாசுரமுழுதினையும்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
4. அறிய ஒண்ணாமைக்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘பிரமனும்’ என்று தொடங்கி.
‘ப்ரஹ்மாபி நவேத்தி அல்பம் ப்ரயத்நத:’ என்பது.
|