New Page 1
எட்டாந்திருவாய்மொழி -
பா. 9 |
337 |
முன்னிய மூவுலகும் அவையாய்-பிரவாஹ ரூபத்தாலே பழையதாகப் போருகிற மூவுலகுக்கும் கடவையாய். மூவுலகு - மூன்று வகைப்பட்ட
ஆத்துமாக்கள்; அல்லது, மூன்று உலங்கள். அவற்றைப் படைத்து - ‘உலகமானது போது, அவற்றை உண்டாக்கி’
என்கிறது. ‘ஆத்துமாக்களான போது, அவர்களுக்கு ஞானத்தின் மலர்ச்சியை உண்டாக்கி’ என்னுதல்.
பின்னும் உள்ளாய் புறத்தாய்-உள்ளும் புறம்பும் பரந்திருக்கின்றாய்! இவை என்ன இயற்கைகளே-உனக்கு
இவைதாம் விளையாட்டாக இராநின்றன; எங்களுக்கு இவைதாம் ஆச்சரியமாக இராநின்றன.
(8)
748
என்ன இயற்கைக
ளால்எங்ங
னேநின்றிட்
டாய்என்கண்ணா!
துன்னு கரசர ணம்முத
லாகஎல்
லாஉறுப்பும்
2உன்னு
சுவைஒளி ஊறுஒலி
நாற்றம்
முற்றும்நீயே
உன்னை உணர உறில்உலப்
பில்லை
நுணுக்கங்களே.
பொ - ரை :
‘என் கண்ணா! எவ்வகையான இயற்கைகளோடு கூடி என்ன பிரகாரத்தால் நிற்கிறாய்? செறிந்திருக்கின்ற
கை கால் முதலான எல்லா அவயவங்களும் நீயே; நினைக்கப்படுகின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று
சொல்லப்படுகிற புலன்கள் முழுதும் நீயே; உன்னை அறியல் உற்றால் நுணுக்கங்கள் எல்லை இல்லாதவனாய்
இருக்கின்றனு,’ என்க.
ஈடு :
ஒன்பதாம் பாட்டு. 3ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஐம்புலன்களும்
அவனுக்கு விபூதியாக இருக்கிற இருப்பை அருளிச்செய்கிறார்.
என்ன
இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா-என்ன தன்மைகளையுடையையாய்க்கொண்டு என்ன
பிரகாரத்தாலே நிற்கிறாய்? எனக்குப் பவ்யனான கிருஷ்ணனே! துன்னு கர சரண
______________________________________________________________
1. ‘முன்னிய’ என்றது,
‘பிரவாகரூபத்தால் நித்தியம்’ என்றபடி. பிரவாகம்-வெள்ளம்.
2. ‘சுவைஒளி ஊறு ஓசை
நாற்றமென் றைந்தின்’
என்பது, திருக்குறள்.
3. திருப்பாசுரம் முழுதினையும் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|