முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

338

திருவாய்மொழி - ஏழாம் பத்து

முதலாக எல்லா உறுப்பும் - நெருங்கி இருந்துள்ள கைகள் கால்கள் தொடக்கமான எல்லா அவயவங்களுக்கும், 1நினைக்கப்படுவனவாய் ஆசைப்படப்படுவனவாய் இருக்கின்ற ஐம்புலன்களுக்கு கடவையாய் இருந்தாய். உன்னை உணர உறில் - உன்னை அறியப்புகில். உலப்பு இல்லை 2நுணுக்கங்களே - உன் வைலக்ஷண்யங்களுக்கு முடிவு இல்லை, ‘நுண்பொருளாய் உள்ளவனை’ என்கிறபடியே, ‘அசித் வஸ்துவான சரீரத்தில் சூக்கும ரூபத்தாலே எங்கும் புக்குப் பரந்திருக்கும் ஆத்துமவஸ்து, இவ்விரண்டிலும் சூக்கும ரூபத்தோடு பரந்திருப்பாய் நீ’ என்றபடி.

(9)

            749
        இல்லை நுணுக்கங்க ளேஇத
             னி்ற்பிறி தென்னும்வண்ணம்
        தொல்லைநன் னூலிற் சொன்ன
             உருவும் அருவும் நீயே
        அல்லித் துழாய்அலங் கல்அணி
             மார்ப!என் அச்சுதனே!
        வல்லதோர் வண்ணம்சொன் னால்அது
             வேஉனக் காம்வண்ணமே.

   
பொ - ரை : ‘இதனைக்காட்டிலும் வேறு நுணுக்கங்கள் இல்லை,’ என்னும் வண்ணம் பழையதான சிறந்த வேதத்தில் சொல்லப்பட்ட அசித்தும் சித்தும் நீயே; அகவிதழையுடைய திருததுழாய் மாலையை அணிந்த திருமார்பினையுடையவனே! என் அச்சுதனே! வல்லது ஒரு வண்ணம் சொன்னால் உனக்கு ஆம் வண்ணம் அதுவேயாம்.

    வி - கு :
‘இதனில் நுணுக்கங்கள் பிறிது இல்லை என்னும் வண்ணம்’ என்று மாற்றுக. அல்லி - பூந்தாதுவுமாம்.

_______________________________________________________________

1. ‘உன்னு’ என்றதன் பொருள், ‘நினைக்கப்படுவனவாய்’ என்பது
  ‘நினைக்கப்படுவனவாய்’ என்றதனை விவரணம் செய்கிறார்,
  ‘ஆசைப்படப்படுவனவாய் இருக்கின்ற’ என்று.

2. நுணுக்கம்-சூக்குமத் தன்மையால் வந்த வைலக்ஷண்யம். ‘வைலக்ஷண்யம்
  யாது?’ என்ன ‘நுண்பொருள்களுக்கும்’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார்.

        ‘நாராயணம் அஸேஷாணாம் அணியாம்ஸம் அணீயஸாம்’

என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 8 : 40.

       
‘ப்ரஸாஸிதாரம் ஸர்வேஷாம் அணீயாம்ஸம் அணீயஸாம்’

என்பது, மனு தர்மம், 1 : 22.